கோவை கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்தது.. எரிவாயு கசிவதால் அச்சம்.. அவிநாசி மேம்பாலத்தில் ஒரே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் டேங்கர் லாரியில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். எனினும், டேங்கரின் ஒரே பகுதியில் லீக் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரியவந்திருக்கிறது.

கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.. உப்பிலிபாளையம் அவிநாசி மேம்பாலம் என்ற பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது..

Kovai gas tanker Lorry Avinashi Bride Coimbatore

இன்று அதிகாலை 3 மணிக்கு மேம்பாலத்தில் சென்ற டேங்கர் லாரி, வளைவில் திரும்ப முடியாமல் கவிழ்ந்துள்ளது.. இதனால், லாரியில் இருந்த புல்லட் டேங்கர், தனியாக பிரிந்து மேம்பாலத்தில் உருண்டது.. இந்த அதிர்வு காரணமாக புல்லட் டேங்கரில் இருந்து சமையல் எரிவாயு கசிய ஆரம்பித்துவிட்டது. லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால் உள்ளேயிருந்து எரிவாயு கசிந்து கொண்டிருக்கிறது.

தீயணைப்பு படை: அதிகாலையில் விபத்து நடந்ததால் பல மணி நேரமாக வாயு கசிவு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். விபத்து குறித்த தகவலறிந்ததுமே, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். எரிவாயு எந்த அளவுக்கு என்பதை ஆராய்வதில் பொறியாளர்களும், தீயணைப்புத் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

டேங்கர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து எரிவாயு கசிவை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர். அதேபோல, டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மக்கள் அச்சம்: ஆனால், டேங்கரின் ஒரே பகுதியில் லீக் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரியவந்திருக்கிறது. எனினும், எரிவாயு கசிவை கட்டுப்படுத்திய பிறகுதான், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, விபத்து நடந்த பகுதிக்கு மேலே, கரண்ட் கம்பிகள் எதுவும் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. மேம்பாலம் என்பதால் அந்த பகுதியில் மின் கம்பிகள் எதுவும் இல்லை. லாரியிலிருந்து கசிந்து வரும் எரிவாயு மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சிறிது அச்சத்தில் உறைந்துள்ளனர்.

டிரைவர் தப்பினார்: இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்.. தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக பனி மூட்டம் காரணமாக, லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 3 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.. கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேலாக எரிவாயு கசிவை தடுக்கும் பணியும் டேங்கர் அப்புறப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே, விபத்து நடந்த அந்த பகுதியைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அச்சத்தில் மக்கள்: அதேபோல, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்த போலீசார் மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து டேங்கரிலிருந்து கேஸ் வெளியேறி வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+