இந்து முன்னணி அட்டாக்.. திருவிழாவான திறப்புவிழா! களைகட்டிய கோவை -பெரியார் பிறந்தநாளில் உதித்த உணவகம்
கோவை: காரமடை அருகே கண்ணார்பாளையத்தில் இந்து முன்னணியினரால் தாக்கப்பட்ட தந்தை பெரியார் உணவகம் மீண்டும் அதே இடத்தில் பெரியார் பிறந்தநாளான இன்று கடை கோலாகலமாக திறக்கப்பட்டு இருக்கிறது.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ளது கண்ணார்பாளையம் பகுதி. இங்குள்ள நால் ரோட்டில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை கடந்த 13 ஆம் தேதி திறந்தார்.
அப்போது, அங்கு உள்ளே சென்ற இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் பெரியார் உணவகத்தின் உரிமையாளர் பிரபாகரனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியரை தாக்கி உணவகத்தை அடித்து நொறுக்கி இருக்கின்றனர்.

மருத்துவமனையில் அனுமதி
இந்த தாக்குதலில் உணவக ஊழியர் அருண் படுகாயமடைந்து காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 36 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடையின் உரிமையாளர் பிரபாகரனும் காயங்கள் காரணமாக சிகிச்சை பெற்றார்.

போலீசில் புகார்
இச்சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவர்களை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பெரியாரிய அமைப்புகள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர்.

இந்து முன்னணி
இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ரவிபாரதி, சரவணகுமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிரபாகரன் ஆகியோரை காரைமடை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனைவரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

6 பிரிவுகளில் வழக்கு
கைதானவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்தல், ஆபாசமாக பேசியது, அத்துமீறியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஹோட்டல் உரிமையாளர் பிரபாகரன் செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்தநாளன்று மீண்டும் கடையை திறப்போம். என்று கூறியுள்ளார்.

பிரம்மாண்ட திறப்பு விழா
இந்த நிலையில் பெரியார் பிறந்தநாளான இன்று தந்தை பெரியார் உணவகம் அதே இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. கடந்த முறை எளிமையான முறையில் திறக்கப்பட்ட இந்த உணவகம் இன்று மக்கள் கூட்டம் திரளி பிரம்மாண்ட முறையில் திறக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருட்டிணன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications