பொள்ளாச்சி விவகாரம்... கோவை எஸ்பியை முதலில் விசாரிக்க வேண்டும்.. அதிகரிக்கும் குரல்கள்!
பொள்ளாச்சி விவகாரத்தில் எஸ்பி பாண்டியராஜனை விசாரிக்க கோரிக்கை எழுந்து வருகிறது.
Recommended Video

கோவை: "ஏங்க.. முதல்ல எஸ்பி பாண்டியராஜனை விசாரிங்க" என்று பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக காவல்துறையிலேயே சிலர் குரல் எழுப்பி வருகின்றனர்.
பொள்ளாச்சி விஷயம் வெடித்து கிளம்பியது... 20 பேர் கொண்ட கும்பல்... 1500 வீடியோக்கள்.. 400-க்கும் மேற்பட்ட பெண்கள் என்று திகில் மற்றும் பகீர் சமாச்சாரங்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளி கொட்டியதுபோல வந்து ஒவ்வொன்றாக விழ ஆரம்பித்தது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் அந்த மங்கலான முதல் வீடியோ கசிந்தது. இந்த சமயத்தில் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்தார் எஸ்பி பாண்டியராஜன்.

அரசியல் தொடர்பு இல்லை
"பலாத்காரம் தொடர்பாக 100, 200 வீடியோக்கள் எல்லாம் இல்லை.. வெறும் 4தான்... சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்துட்டோம். இதில் வேறு எந்த அரசியல் தொடர்பும் இல்லை" என்று சத்தியம் பண்ணாத குறையாக இதை சொன்னதுடன், பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான அடையாளங்களையும் வெளியிட்டார்.

கண்டிப்பு
கடைசியில் விவகாரம் எங்கெங்கோ சென்று, சிபிஐ, சிபிசிஐடி விசாரணை என மாறி, இந்த விஷயத்தில் கோர்ட் தலையிட்டு எஸ்பி பாண்டியராஜனை கண்டிக்காத குறையாக சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதே மனநிலைதான் தமிழக மக்கள் நிலையும்.

சிபிஐ விசாரணை
இப்போது காவல்துறையிலேயே பாண்டியராஜனுக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி போலீசாரே இந்த விஷயத்தை கமுக்கமாக முடித்துவிடுவதாக இருந்தது. பிறகுதான் நிலைமை சீரியஸ் ஆகி சிபிஐ-க்கு போனது.

அவரை விசாரிங்க
இது சம்பந்தமாக பேசிய சில போலீசார், "ஒருவேளை இந்த கேஸை சிபிஐ எடுப்பதாக இருந்தால், முதலில் எஸ்பி பாண்டியராஜனை விசாரிங்க. அவர் மட்டுமில்லை.. அவர்கூட, பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராம், இன்ஸ்பெக்டர் நடேசன், எஸ்ஐ ராஜேந்திரபிரசாத், எஸ்எஸ்ஐ ரகு என இவர்கள் யாரையும் விடாதீங்க. எல்லாரையும் கிடுக்கிப்பிடி விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரணும்.

நெஞ்சில் ஈரம்
ஏன்னா.. இவங்கதான் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்கிறார்கள், மொத்தமாக ஒன்னுமே இல்லாமல் இந்த கேஸை மூடிமறைக்க பார்க்கிறார்கள். இதற்காக பல பிளான்கள் பக்காவாக நடந்துவருகிறது.. அதனால இவங்கள விட்டுடாதீங்க" என்கின்றனர் அந்த நெஞ்சில் ஈரம் நிறைந்த கோவை காக்கி சட்டை அதிகாரிகள்!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications