மே 15.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கெடு விதித்த கிருஷ்ணசாமி.. திமுக கூட்டணியிலும் பேசப்போறாராமே!
கோவை : மே மாதம் 15 ஆம் தேதிக்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில்பாலாஜி மூட வேண்டும், இல்லையென்றால் நாங்கள் மூடுவோம், பின்னர் டாஸ்மாக் பார்களை மூட போராட்டம் நடத்துவோம், திமுக கூட்டணி கட்சிகளுடனும் இதுதொடர்பாகப் பேசுவோம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். ஆன்லைன் ரம்மியால் சொத்துகளை இழந்தார்கள், உயிர்களை இழந்தார்கள். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது. ஆனால் டாஸ்மாக் மூலம் தான் அனைத்து விதமான சமூக கேடுகளும் நடக்கின்றன. அதனால்தான் டாஸ்மாக் கடைகளை அறவே மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரை குறி வைத்துத் தாக்கும் போக்கு இருக்கிறது. ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர். ஆளுநர்கள் இல்லாமல் மாநில அரசை எண்ணிப் பார்க்க முடியாது. சட்டமன்றத்திற்குள் கைகட்டி சும்மா பார்க்க மாட்டோம் என முதலமைச்சர் சொல்வது எல்லாம் ஆபத்தானது. கைகட்டி பார்க்க மாட்டோம் என்றால் என்ன அர்த்தம்?
2021ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது கருப்பு பலூன் பறந்தது. ஆனால் இப்போது அதை நிறுத்திவிட்டு சரண் அடைந்துவிட்டனர். குடும்பமே போய் மோடியிடம் கை தூக்கி நிற்கின்றனர். இவர்கள் சங்கிகளாக மாறிவிட்டார்களா? இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இனிமேல் திமுக போடும் நாடகத்தை நம்பாதீர்கள். உங்களோடு ரம்ஜான் மாதத்தில் தொப்பி போட்டு வருவார்கள் ஏமாந்து விட வேண்டாம்." என்றார்.
தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி, "மது பழக்கங்களுக்கு காரணமாக இருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும் . பெண்களை விதவையாக்குவதை நிறுத்த வேண்டும். டாஸ்மாக்கை மூட ஆளுநர் ஒப்புதல் தேவை இல்லை. டாஸ்மாக் கடைகளைப் போல் பார்களில் சட்டவிரோதமாக மது விற்கப்படுகிறது. கரூர் மூலமாக எத்தனை சட்டவிரோத பார்கள் நடக்கிறது என்பதை நிதித்துறை அமைச்சர் ஆய்வு செய்து சொல்ல வேண்டும்.

மே 15ஆம் தேதிக்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மூட வேண்டும். இல்லையென்றால் நாங்களே மூடுவோம். பின்னர் டாஸ்மாக் பார்களை மூட போராட்டம் நடத்துவோம். அதன்பிறகு மது தயாரிப்பு ஆலைகளை மூடப் போராட்டம் நடத்துவோம். தனிநபர் கஜானாவுக்கு பணம் போகிறது. பல இடங்களில் சட்டவிரோதமாக நடக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுடனும் பேச இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications