கோவையில் பயங்கரம்.. 5 வயது சிறுவனை கவ்வி சென்று கொன்ற சிறுத்தை.. வீட்டு முன் நின்றவனுக்கு நேர்ந்த சோகம்
கோவை: கோவை வால்பாறை அருகே வீட்டு முன்பு நின்ற 5 வயது சிறுவனை தாக்கி வாயில் கவ்வி கொண்டு சிறுத்தை சென்றது. இதில் அந்த சிறுவன் துடிதுடித்து இறந்த நிலையில் உடலை புதரில் வீசிவிட்டு சிறுத்தை சென்ற சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.
கோவை வால்பாறை அருகே தேயிலை தோட்டங்கள் அதிகம் உள்ளன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். வால்பாறை அருகே அய்யர்பாடி ஜேஇ பங்களாவில் உள்ள தேயிலை தோட்ட பிரிவில் தங்கி அசாம் மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தான் அசாம் மாநில தம்பதியின் 5 வயது மகன் இன்று மாலையில் தனது வீட்டின் முன்பு இருந்தான். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று நுழைந்தது. அந்த சிறுத்தை சிறுவனை தாக்கியது.
அதுமட்டுமின்றி சிறுவனை அவனது வீட்டில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக கவ்வி சென்றது. இதற்கிடையே தான் சிறுவனை மாயமானதால் அவனது பெற்றோர்கள் தேடினர். அப்போது தான் சிறுத்தை கவ்வி இழுத்து சென்றது தெரியவந்தது. வீட்டில் இருந்த கொஞ்ச தூரத்தில் புதரில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
உடனடியாக அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications