உங்களுக்கு தகரடப்பா தூக்க அப்பா இருந்தார்! ஆனால் எனக்கு.. அண்ணாமலைக்கு கோவை அதிமுக வேட்பாளர் பதிலடி
கோவை: அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அவரது தந்தையின் எம்எல்ஏ கோட்டாவில் கல்லூரியில் படித்ததாக அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் அண்ணாமலை கல்லூரி படித்தபோது தகரடப்பா தூக்க அப்பா இருந்தார். ஆனால் எனக்கு அப்பா இல்லை. தவறான கருத்து கூறிய அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும் என சிங்கை ராமச்சந்திரன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் கோவையில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். அங்கு அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் களமிறங்கி உள்ளார். அண்ணாலை கோவையில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் தான் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அவருக்கும், கோவைக்கும் இடையேயான தொடர்பு பற்றி பேசினார். இது தான் தற்போது கோவை தொகுதியில் ‛டாக் ஆப் தி டவுன்' ஆக மாறி உள்ளது.
அப்போது, ‛‛அவங்க அப்பா (அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் அப்பா) ஒரு எம்எல்ஏ. அப்பாவின் எம்எல்ஏ கோட்டா சீட்டை பயன்படுத்தி கல்லூரியில் படித்தவர் சிங்கை ராமச்சந்திரன். இதுதான் வாரிசு அரசியல். ஆனால் 2002ல் முதன் முதலாக நான் கோவைக்கு எதுவும் இல்லாமல் வந்தேன். எங்கப்பா வேட்டி கட்டிகிட்டு கிராமத்தில் இருந்து 2 தகர டப்பாவை எடுத்துகிட்டு 3 பேருந்து மாறி 2002ல் கோவைக்கு வந்தேன்.
அப்போது எனக்கு வயது 17. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பேருந்தை பிடித்து 2 தகரப் பெட்டியோடு பீளமேடு போய் இறங்குறேன். பீளமேட்டில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி முன்னாடி நானும் என்னுடைய தந்தையும் 2 தகரப் பெட்டியை வைத்து கொண்டு நின்றோம். பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. எம்.எல்.ஏ. கோட்டாவில் இல்லை. அப்பா பெயரை வைத்து நான் படிக்கவில்லை.அதேபோல உழைத்து 2 தகரப் பெட்டியோடு கோவைக்கு வந்தேன். இப்போது தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் ஒன்றும் கோவைக்கு புதிதானவன் இல்லை'' என்றார்.
இந்நிலையில் தான் அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். கல்லூரி படிக்கும்போது அண்ணாமலைக்கு தகரடப்பா தூக்க அப்பா இருந்தார். ஆனால் நான் கல்லூரி படிக்கும்போது அப்பா இல்லாம் படித்தேன் என உருக்கமாக கூறியுள்ளதோடு, அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிங்கை ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கரூரை சேர்ந்த, இந்த ஊரை சேராத ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை, மறைந்த எனது தந்தை சிங்கை கோவிந்தராசு எம்எல்ஏ கோட்டாவில் சீட் வாங்கியதாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த கருத்து மிகவும் தவறான, மனவருத்தத்துக்குரிய
ஒரு செயல். தந்தை இறக்கும்போது எனக்கு வயது 11. நான் பிஇ படிக்கும்போது எனக்கு வயது 18. நான் டிப்ளேமா படித்தபோது ‛பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ஸ்' எனும் விருதை பிஎஸ்ஜி பாலிடெக்னிக்கில் வாங்கி பிஎஸ்ஜி டெக்கில் வாய்ப்பு கிடைத்தது.
அவர் (அண்ணாமலை) தகர டப்பாவை எடுத்து கொண்டு 3 பஸ் மாறி வந்தாக கூறுகிறார். நான் இந்த பக்கம் தகர டப்பாவை பிடித்தேன். அந்த பக்கம் அவரது அப்பா தகர டப்பாவை பிடித்ததாக கூறுகிறார். அவருக்காவது தகர டப்பாவை பிடிக்க அப்பா இருந்தாங்க. ஆனால் எனக்கு அப்பாவை இல்லை. நான் தனி ஆளாக 1995ல் வரதராஜபுரத்தில் இருந்து பஸ் ஏறி நான் தனியாக தான் சென்றேன்.
76 ஏக்கர் வைத்திருப்பதாக அவரது பிரமாணபத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பண்ணையார் போல் அவ்வளவு நிலம் வைத்து கொண்டு தகரடப்பாவை எடுத்து வந்தேன் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. நான் இங்கு எம்பி வேட்பாளராக உங்களை இன்று சந்திக்கிறேன் என்றால் அதற்கு எங்கள் அம்மா தான் காரணம். அவர் தான் என் ஹீரோ. ஏனென்றால் அவர் இல்லையென்றால் நான் இங்கு இல்லை. அவர் தான் எனக்கு படிப்பை கொடுத்தார்.
அண்ணாமலையின் பாஸ் நரேந்திர மோடியின் குஜராத்தில் மெரிட்டில் சென்று ஐஐஎம்மில் படித்து மாணவர் மன்ற தேர்தலில் ஜெயித்து வந்தவன். இப்படி பேச வேண்டும் என்றால் நிறைய விஷயங்களை பேசலாம். ஆனால் இந்த செயலால் அதிமுக தொண்டர்கள், எனது அப்பாவின் விசுவாசிகளும், சிங்காநல்லூரில் அவரால் பயன்பெற்ற மக்களும், எங்களை சார்ந்தவர்களும் மிகவும் மனவருத்தத்தில் உள்ளோம். இறந்துபோன ஒருவரை பற்றி பொய்யான தகவல்கள் கூறியதால் அண்ணாமலை மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்'' என்றார்.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications