அண்ணாமலையின் கன்னத்தில் அன்பு முத்தம்.. கோவை சிறுமிக்கு பாஜக தலைவர் சொன்ன ‛அட்வைஸ்’

Subscribe to Oneindia Tamil

கோவை: வரும் லோக்சபா தேர்தலில் கோவை வேட்பாளராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் அண்ணாமலை கன்னத்தில் சிறுமி அன்பு முத்தம் கொடுத்த நிலையில், அவருக்கு அண்ணாமலை முக்கிய அட்வைஸ் கொடுத்த சம்பவம் நடந்தது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக 39 லோக்சபா தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

lok sabha election 2024 Girl gives kiss on cheek of Annamalai who contest as a BJP candidate in Coimbatore

பாஜக கூட்டணியில் பாமக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ பன்னீர் செல்வம் அணி, பாாிவேந்தரின் ஐஜேகே, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, தேவநாதனின் இமகமுக, ஜான் பாண்டியனின் தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் அனைத்து கட்சிகளும் தங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் நீலகிரி தொகுதியிலும், மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியிலும் போட்டியிடுகிறார். பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் களமிறங்கி உள்ளார். மேலும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் பாஜக வேட்பாளர்கள் தங்களுக்கான தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று சென்றார். அப்போது அவரை அங்குள்ள பாஜகவினர் வரவேற்றனர். வெற்றி வேட்பாளர் அண்ணாமலை, பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டு அவர்கள் அண்ணாமலையை வரவேற்றனர்.

இந்த வேளையில் பெண்கள் அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்றனர். அப்போது சிறுமி ஒருவர் அண்ணாமலை அருகே சென்றார். அவர் அண்ணாமலையின் கன்னத்தில் முத்தமிட்டார். அண்ணாமலை மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் சிறுமி முத்தம் கொடுத்தார்.

இதையடுத்து அண்ணாமலை, சிறுமியின் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்தார். மேலும் நன்றாக படிக்க வேண்டும் என அவர் அட்வைஸ் கொடுத்தார். இந்நிலையில் தான் அண்ணாமலையின் கன்னத்தில் சிறுமி முத்தம் கொடுத்தது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+