இந்தியாவில் எங்கும் இப்படி நடக்கவில்லை.. புதிய சாதனை படைத்த கோவை வாக்காளர்கள்.. வெல்டன்!
லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூர் வாக்காளர்கள் மிகப்பெரிய சாதனை ஒன்றை சத்தமில்லாமல் செய்து இருக்கிறார்கள்.
Recommended Video
கோயம்புத்தூர்: லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூர் வாக்காளர்கள் மிகப்பெரிய சாதனை ஒன்றை சத்தமில்லாமல் செய்து இருக்கிறார்கள். இந்தியாவிலேயே இப்படி ஒரு சாதனை இந்தியா முழுக்க எங்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தல் பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி வருகிறது. தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக வந்துள்ளது.
பெரும்பாலும் பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவு இன்று, தனிக்கட்சியாக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில்தான் இந்த லோக்சபா தேர்தல் முடிவுகளில் கோவையில் வித்தியாசமான சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது.

என்ன நடந்தது
கோவை தொகுதியில் திமுக கூட்டணியாக சிபிஐ வேட்பாளர், நடராஜன் முன்னிலை வகித்து வருகிறார். இவர் மொத்தம் 2.66 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் 1.8 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். மொத்தம் 80 ஆயிரம் வாக்குகள் நடராஜன் முன்னிலை பெற்றுள்ளார்.

வேறு எங்கு
தமிழகம் இல்லாமல் நாடு முழுக்க மொத்தம் இரண்டு இடங்களில் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னிலை வகிக்கிறது. அதில் கேரளாவில் ஆலப்புழா தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள 4 சிபிஐ, சிபிஐ முன்னணியை சேர்த்து மொத்தம் 6 இடங்களில் மட்டுமே கம்யூனிஸ்ட்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.

கோவை எப்படி
இந்த நிலையில் கோவை எப்படி வித்தியாசப்படுகிறது என்றால், கோவையில் மட்டுமே கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவர் வலுவான பாஜக வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற உள்ளார். இந்தியா முழுக்க பாஜக வலுவான இருக்கும் இடங்களில் கம்யூனிஸ்ட் எங்கும் வெற்றிபெறவில்லை. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் வலுவாக இருக்கும் ஒரு தொகுதியில் கூட எங்கும் கம்யூனிஸ்ட் வெற்றிபெற்றது இல்லை.

கோவை சாதனை
அதை கோவை முறியடித்து இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலேயே கோவையில் மட்டும் நடராஜன்தான் பாஜக வேட்பாளர் ஒருவரை, அதுவும் வலுவான பாஜக வேட்பாளரை, பாஜக வலுவாக இருக்கும் தொகுதியில் தோல்வி அடைய செய்து இருக்கிறார். இது பலரும் எதிர்பார்க்காத முடிவு என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடு முழுக்க இந்த தேர்தல் முடிவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications