லுலு மால் அசத்தல்.. கோவையில் பியூட்டி திருவிழா.. ஆச்சரியம் தரும் ஸ்பெஷல் ஆஃபர்.. கோயம்புத்தூர் பிஸி

Subscribe to Oneindia Tamil

கோவை: கிறிஸ்துமஸ் நெருங்கி வரும்சூழலில், கோவை லுலு மால் கோவை மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. அந்தவகையில், வரும் 8ம் தேதி வரை, கோயம்புத்தூரில் லுலு மாலின் சிறப்பு தள்ளுபடி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. லுலு பியூட்டி திருவிழா என்ற பெயரில், 50 சதவீதம் ஆஃபர் அறிவிக்கப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில், கடந்த வருடம், லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக திறக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

lulu mall coimbatore kovai

கோவையை பொறுத்தவரை, மிகப்பெரிய தொழில் நகரம் என்பதால், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் என ஷாப்பிங் இடங்கள் ஏராளமாக உள்ளன.. இருந்தாலும், எல்லா பொருட்களையும் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடியதாக ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. அதிலும், வீட்டு உபயோக பொருட்கள், உணவுகள், காய்கறிகள், என்று அனைத்துமே இதற்குள் அடங்கிவிட்டன..

பண்டிகை காலம்: லுலு மால் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இப்போதுவரை அதன் விற்பனை அமோகமாக உள்ளது.. எந்நேரமும் இங்கு மக்கள் நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

அதுவும் பண்டிகை காலம் வந்துவிட்டால், ஹைப்பர் மாலுக்குள் எந்நேரமும் வாடிக்கையாளர்கள் வந்தவண்ணம் உள்ளார்களாம். இதற்கு முக்கிய காரணம், லுலு மால்களில் அறிவிக்கப்படும் ஸ்பெஷல் ஆஃபர்கள்தான். அத்துடன், பரிசுப்பொருட்களும், குலுக்கல் முறையில் இங்கு வழங்கப்படுவதால், இதற்கெல்லாம் கோவை மக்களிடம் தனி மவுசு உள்ளது..

எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை சாமான்கள் மற்றும் பல பொருட்கள் உட்பட பலதரப்பட்ட தயாரிப்புகளில் ஆச்சரியமூட்டும் தள்ளுபடிகள் ஈர்த்து வருகின்றன. கடந்த வாரம்கூட, லுலு சூப்பர் ப்ரைடே சேல் என்ற பெயரில் சிறப்பு ஆஃபர் வழங்கப்பட்டது. இது கடந்த 22-ந் தேதி முதல் நேற்று முன்தினம் டிசம்பர் 1-ந் தேதி வரை நடைபெற்றது. அதேபோல, அடுத்த அறிவிப்பும் வெளியாகி, கோவை மக்களை குதூகலிக்க செய்து வருகிறது.

பியூட்டி திருவிழா: முக்கியமாக, லுலு பியூட்டி திருவிழா என்ற பெயரில், நவம்பர் 28 ம் தேதி துவங்கி, வரும் டிசம்பர் 8 வரை நடைபெற உள்ளது.. இதில், தோல் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் தொடர்பான பொருட்களுக்கு பிரத்யேக சலுகைகளுடன் அழகு சாதனங்கள் விற்பனைக்கு உள்ளன. இந்த அழகு சாதன பொருட்களில் 50% வரை தள்ளுபடியும் உண்டு

பியூட்டி திருவிழா போட்டிகள் வரும் டிசம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது.. லுலு பியூட்டி ஃபெஸ்ட் கோ கிளாம் போட்டியில் வாடிக்கையாளர்கள் பங்கேற்று, திறமைகளையும், படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம். இதற்கெல்லாம் பரிசுகளும் உண்டு.

தள்ளுபடி அறிவிப்பு: அதாவது, டிசம்பர் 7ம் தேதி, மெஹந்தி போட்டி நடக்க உள்ளது.. இதில், நெயில் ஆர்ட் செய்யலாம், ஐலைனர் வடிவமைப்புகளையும் உருவாக்கலாம். இதற்கு 15 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல கிறிஸ்துமஸ் மரங்களும் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரை இவை விற்பனைக்கு இருக்குமாம்.. மீண்டும் தள்ளுபடி அறிவிப்பு என்பதால், கோவை லுலு மால், பிஸியாகவே காணப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+