கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அட புதுசா இருக்கே.. காவி உடையில் ஸ்டாலின்.. தேர்தலுக்கு பின் கூட்டணி வைக்க இப்பவே சிக்னலா?

திமுக தலைவர் ஸ்டாலின் காவி நிற உடையில் பிரச்சாரம் செய்தது தேர்தல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: திமுக தலைவர் ஸ்டாலின் காவி நிற உடையில் பிரச்சாரம் செய்தது தேர்தல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் முடிந்துள்ளது. 18 தொகுதி சட்டசபை இடைதேர்தல் முடிந்துள்ள நிலையில் 4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது.

தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தினமும் விதவிதமாக உடைகள் அணிந்து வருகிறார். வெள்ளை வேட்டி சட்டை மட்டும் அணியாமல் கலர் கலராக உடை அணிந்து பிரச்சாரம் செய்து வருகிறார். பெரும்பாலும் இவர் டீ சர்ட் அணிந்து வலம் வருகிறார்.

இந்த சண்டை எப்ப முடியும்.. அப்பீல் செய்ய கிரண் பேடிக்கு காசு தர மாட்டோம்.. நாராயணசாமி!இந்த சண்டை எப்ப முடியும்.. அப்பீல் செய்ய கிரண் பேடிக்கு காசு தர மாட்டோம்.. நாராயணசாமி!

சிவப்பு நிற டீ சர்ட்

சிவப்பு நிற டீ சர்ட்

இந்த நிலையில் கடந்த மே 1ம் தேதி ஸ்டாலின் சிவப்பு நிற டீ சர்ட் அணிந்து இருந்தார். அவருடன் கனிமொழியும் சிவப்பு நிற புடவை உடுத்தி இருந்தார். மே 1 உழைப்பாளர் தினம் என்பதால் அவர் சிவப்பு நிற உடை அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சாரம்

பிரச்சாரம்

இந்த நிலையில் கோவை சூலூரில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோவை சூலூர் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஸ்டாலின் காலையில் இருந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

காவி உடை

காவி உடை

இதில் ஸ்டாலின் காவி உடையில் பிரச்சாரம் செய்தார். காவி நிற டீ சர்ட் அணிந்து இருந்தார். திமுக தொண்டர்களே ஸ்டாலின் இந்த கலரில் உடை அணிந்து வருவார் என்று நினைக்கவில்லை. இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.

பாஜக

இதையடுத்து சிலர் திமுக பாஜகவுடன் தேர்தலுக்கு பின் கூட்டணி வைக்க போகிறது என்று கூறி வருகிறார்கள். ஸ்டாலின் டீ சர்ட்டை வைத்து காலையில் இருந்து பலர் டிவிட் செய்து வருகிறார்கள். இவர், காவி டீ ஷர்ட்டில் ஸ்டாலின்.. தேர்தலுக்கு பின்னாடி கூட்டணி வைப்பாரோ??? என்று கேட்டுள்ளார்.

English summary
DMK Chief M K Stalin's saffron color t-shirt makes controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X