அக்கா அமைச்சர், தம்பி மேயர்.. மொத்தம் 3 முதல்வர்கள்.. இதுதான் திமுக: மதுரை வெங்கடேசனை சாடிய அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

கோவை: திமுக நம்மை கைவிட்டுவிடக்கூடாது என்பதற்காக, வெங்கடேசன் பேசும் கருத்து கொஞ்சமும் ஏற்புடையது கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேசினார்.. அப்போது பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
வெங்கடேசன் பேசும்போது, "தெய்வத்தின் குழந்தை என்று பிரதமர் சொன்னதை மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை... தெய்வத்தால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? மன்னராட்சி எப்போது ஒழிந்தபோதே செங்கோலின் மகிமையும் ஒழிந்து விட்டது.

Madurai su venkatesan Kovai Annamalai

செங்கோல்: செங்கோலை கையில் வைத்திருந்த மன்னர்கள் பெண்களை அந்தப்புரத்தில் அடிமையாக வைத்திருந்ததார்கள் தெரியுமா? செங்கோலை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் வைத்ததன் மூலம் பெண்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறீர்கள்? செங்கோல் என்பது மன்னராட்சி குறியீடு மட்டுமின்றி அறம் மற்றும் நேர்மையின் குறியீடு என்ற சு.வெங்கடேசன், பாஜகவுக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?

தேர்தல் முடிந்ததும் உத்தரப் பிரதேசத்திலே போய் தமிழர்களைப் பற்றி நீங்கள் என்ன பேசினீர்கள்? பீகாரிலே என்ன பேசினீர்கள் ? ஒடிசாவிலே என்ன பேசினீர்கள்? உங்களுக்கு அந்த அரசியல் அறமும், நேர்மையையும் இருந்திருந்தால் நீங்கள் அதைத் தமிழ்நாட்டில் பேசியிருக்க வேண்டும். எந்த ஆட்சியாளரும் இவ்வளவு இழிவாகத் தமிழர்களை பேசியதில்லை.

மணிப்பூர்: நீட் பற்றி கல்வி அமைச்சர் பேச மறுக்கிறார்... ரயில் விபத்தைப் பற்றி ரயில்வே அமைச்சர் பேச மறுக்கிறார். மணிப்பூர் வன்முறைகளைப் பற்றி உள்துறை அமைச்சர் பேச மறுக்கிறார்.. . ஆனால் அதற்குப் பதிலாக சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.. இந்தத் தேர்தலின் மூலம் உங்களது சரிவு ஆரம்பமாகிவிட்டது" என்றெல்லாம் பேசியிருந்தார் வெங்கடேசன்.

சு.வெங்கடேசனின் இந்த பேச்சுக்கு பாஜக கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகிறது. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், "செங்கோல் குறித்து விமர்சித்துப்பேசி தமிழ் மன்னர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தி விட்டார்" என்று சாடி இருக்கிறார்.

அண்ணாமலை: அதேபோல, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வெங்கடேசனின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை சொன்னதாவது:

"லோக்சபாவில் பேசிய எம்.பி., வெங்கடேசன், செங்கோல் என்பது பெண்களை அடிமைப்படுத்துவதன் அடையாளம் என்றார். இதே, வெங்கடேசன், மதுரை பெண் மேயர் இந்திராணிக்கு செங்கோல் கொடுத்திருக்கிறார். (போட்டோ ஆதாரத்தை காட்டினார்). இதற்கு இந்தப் பெண் மேயரை அடிமைப்படுத்தியதாக அர்த்தமா?

போலி முகத்திரை: நீங்கள் செங்கோலை கையில் பிடிக்கலாம், அது தவறில்லை... ஆனால், பிரதமர் மோடி பார்லிமென்டில் வைத்தால் அது தவறு. இதுதான் இவர்களின் அரசியல் போலி முகத்திரை.

திமுக நம்மைக் கைவிட்டுவிடக்கூடாது என்பதற்காக, வெங்கடேசன் பேசும் கருத்து கொஞ்சமும் ஏற்புடையது கிடையாது.. யார் பிற்போக்குத்தனமான அரசியல் செய்கிறார்கள் என்பதை மக்களே முடிவு செய்யட்டும். தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிதான் பிரதானமாக இருக்க வேண்டும் என்று சொன்னோம்.. தமிழக அரசு மாநிலக் கல்விக் கொள்கையில், இப்போது அதையே அறிவித்துள்ளது.

மேயர்கள்: ஒரு பக்கம் இந்தி வேண்டாம் என்று சொல்லிவிட்டு, உருது பள்ளிகளை துவக்குவது குறித்து, மாநில கல்விக் கொள்கை பற்றி பேசுகிறது. மதராஸாவில் கற்பிக்கும் பாடங்களை, பட்டப்படிப்புகளை ராணுவம், சிவில், வங்கித் தேர்வுகளில் அங்கீகரிக்க வேண்டும் என மாநில அரசின் கல்விக் கொள்கை கூறுகிறது. தமிழகத்துக்கு மட்டும் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. நான்கு மேயர்களை திமுக மாற்றப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.. இது அவர்களின் உட்கட்சி பிரச்சனை..

ஆனால் செயல்படாத மேயர்களை நியமித்துவிட்டு இப்போது மாற்ற போவதாக சொல்கிறார்கள்..

தூத்துக்குடியில் அக்கா அமைச்சர், தம்பி மேயர்.. திருநெல்வேலியில் வெள்ளம் வந்தப்போ, உதயநிதி இளைஞர் மாநாட்டுக்காக சேலத்தில் பந்தல் போட்டுட்டு இருக்காரு மேயர்.

ராகுலுக்கு வாய் இருக்கிறது. லோக்சபாவில் என்ன வேண்டுமானாலும் பேசலாம்... அதற்குக் கை தட்ட திமுகவில் கொத்தடிமைகள் இருப்பதைப்போல, அங்கும் கொத்தடிமைகள் இருக்கின்றனர்.

ராகுல் காந்தி: இந்து தாய் தந்தைக்குப் பிறந்து, குல தெய்வ கோயிலில் கிடாய் வெட்டி, மொட்டை அடித்து அந்த சம்பிரதாயத்தில் வந்த நாங்கள், இந்துவைப் பற்றிப் பேச உரிமை இருக்கிறதா அல்லது ராகுலின் பாரம்பரியத்தில் வந்த ஒருவருக்கு பேச உரிமை இருக்கிறதா''? என்று கேள்வி எழுப்பினார் அண்ணாமலை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+