கோவை.. 12 அடி நீளத்தில் ரோட்டுக்கு வந்த மலைப்பாம்பு.. காப்பாற்றிய 'கருணை..' வைரலாகும் வீடியோ
கோவை: 12 அடி நீளம்.. பிரமாண்டமான மலைப்பாம்பு.. பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் ஒரு சாலையில் கடந்து சென்றால் யாராக இருந்தாலும் பயப்படத்தான் செய்வார்கள்.
Recommended Video
ஆனால், ஒரு நல்ல இதயம் அந்த மலைப்பாம்பை பாதிப்பு இல்லாமல் நெடுஞ்சாலையை கடக்க உதவியுள்ளது. அந்த வீடியோதான் தற்போது வைரலாக சுற்றி வருகிறது.
உலகத்தில் எத்தனையோ விதமான மனிதாபிமானிகள் இருக்கிறார்கள்.

மனிதாபிமானம்
சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களுக்கு சோறு வைப்பது, பறவைகளுக்கு வீட்டு மொட்டை மாடியில் தண்ணீர் வைப்பது, இப்படி பலவிதமாக, உயிரினங்கள் மீது அன்பு காட்டுவோர் இருக்கிறார்கள். ஆனால், மலைப்பாம்பு காட்டுக்குள் செல்ல வழி காட்டிய, மனிதாபிமானம் கொண்ட நபர் வீடியோவில் பதிவாகி இப்போது வைரலாக சுற்றி வருகிறார்.

12 அடி நீள மலைப் பாம்பு
கோவையை அடுத்த, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில், கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், 12 அடி நீள மலைப்பாம்பு, மெதுவாக சாலையை கடந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து பயந்து போன வாகன ஓட்டிகள், அப்படியே வாகனங்களை நிறுத்திவிட்டனர். மலைப்பாம்பு கிராஸ் செய்யட்டும் என்று காத்திருந்தனர்.

காட்டுக்குள் திருப்பினார்
ஆனால், மலைப்பாம்பு கிராஸ் செய்யாமல், சாலை நடுவேயுள்ள டிவைடர் பகுதியில் ஊர்ந்தபடி இருந்தது. பெரிய பாம்பு என்பதால் அச்சமடைந்து போய் வாகன ஓட்டிகள் அப்படியே நின்றுவிட்டனர். ஆனால் ஒரு நபர் மட்டும், ஒரு பெரிய கம்பை எடுத்துக் கொண்டு, மலைப்பாம்பு சாலையை கடக்கும் வகையில், அதன் பாதையை திருப்பி விட்டார்.

பாராட்டு
இதைப் பார்த்த மக்கள் வியந்துபோய் நின்றனர். அந்த பாம்பும் பத்திரமாக சாலையோர புதருக்குள் புகுந்து காட்டுக்குள் சென்றது. தனது உயிரைப் பற்றி கவலை இருந்தாலும், ஜாக்கிரதையாக, செயல்பட்டு மலைப்பாம்பின் உயிரை காப்பாற்றிவிட்டார் அந்த நபர். அவருக்கு அங்கிருந்தோர் பாராட்டு தெரிவித்துவிட்டு கிளம்பினர்.


Click it and Unblock the Notifications
