நெற்றியில் "மாரிதாஸ் வாழ்க".. கைகளில் "ஃபாரின் மதவெறி திமுக அரசு".. எழுதி வந்த நபரால் பரபரப்பு
மாரிதாஸ் வாழ்க என நெற்றியில் எழுதி வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது
கோவை: "மாரிதாஸ் வாழ்க" என்று நெற்றியிலும், "ஃபாரின் மதவெறி DMK சிற்றரசு ஒழிக" என்று கைகளிலும் எழுதியபடி வந்த நபரால், கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
யூடியூபரான மாரிதாஸ், முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்தும், மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும் கருத்து ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் ராமசுப்ரமணியன் என்பவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்..

பாஜக
இதையடுத்து, அந்த புகாரின்பேரில் 4 பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலிலும் அடைக்கப்பட்டார். இதனிடையே, மாரிதாஸை கைது செய்ய போலீசார் சென்றபோது, காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, கூட்டத்தை கூட்டி தொற்று பரவலுக்கு வழிவகுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர் பாஜக தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் மற்றும் பாஜகவினர் 50 பேர் மீது திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்...

கண்டனம்
எனவே, மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். மேலும், திமுக அரசு கருத்துரிமையை நசுக்குவதாக சொல்லியும், பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்தும் மதுரை மாநகர பாகவினர் மற்றும் நிர்வாகிகள் பீபீகுளம் உழவர் சந்தை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வாயில் கருப்புத் துணி கட்டி தமிழக அரசுக்கு எதிராக போராட்டமும் நடத்தியிருந்தனர்..

பரபரப்பு
இந்நிலையில், மாரிதாஸ் கைதை கண்டித்து, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நெற்றியில் மாரிதாஸ் வாழ்க என்று எழுதி ஒட்டிக் கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பெயர் கந்தசாமி, பேரூர் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.. "மாரிதாஸ் வாழ்க" என்று தன்னுடைய நெற்றியிலும், "ஃபாரின் மதவெறி DMK சிற்றரசு ஒழிக" என்று கைகளிலும் எழுதியபடி கலெக்டர் அலுவலகம் இவர் வந்திருந்தார்..
Recommended Video

வாசகம்
அப்போது அவர் பேசியபோது, நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை, இந்து என்ற உணர்வில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியன் என்ற முறையில் இங்கு வந்துள்ளேன்.. அந்த கைது நடவடிக்கையை கண்டிக்கிறேன் என்றார்.. இதையடுத்து, அங்கிருந்த போலீசார் கந்தசாமியை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இதன்காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேம் பரபரப்பு ஏற்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications