கோவையில் இன்று பிரமாண்ட மாநாடு.. திரளும் திமுக பாக முகவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!
கோவை: கோவையில் இன்று திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில், 1.50 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுக, தொடர்ச்சியாக மாநாடுகள், பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. திமுக சாா்பில் மண்டல அளவிலான இளைஞரணி மாநாடு, வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

திமுகவின் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் மண்டல அளவிலான பாக முகவர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில், முதல்வா் ஸ்டாலின் கலந்து கொண்டு முகவா்களுக்கு நேரடியாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி வருகிறாா். மதுரையில் தென் மண்டல பாக முகவா்கள் மாநாடு அண்மையில் முடிவடைந்தது.
இந்த நிலையில், மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் மாநாடு கோவை எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி அருகே திறந்தவெளி மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. பிரமாண்டமான முறையில் நடைபெறும் இம்மாநாட்டுக்கு திமுக மேற்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை தாங்குகிறார்.
இந்த மாநாட்டில், திமுக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 1.50 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். இதில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பாக முகவர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கி, சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். இதற்கான திடல் அமைக்கும் பணியை கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் கண்காணித்து வருகிறார்.
மேற்கு மண்டல திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, தலைமை நிலைய செயலாளர் அன்பகம் ரவி, கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ்செல்வன், கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் நேற்று மாநாட்டு பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications