கோவை அருகே ராட்சத குழாய் உடைந்து 20 அடி உயரத்துக்கு பீய்ச்சி அடித்த குடிநீர்.. போக்குவரத்து முடக்கம்
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள நடூர் பாலம் அருகே கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல அடி உயரத்திற்கு அருவி போல குடிநீர் கொட்டியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில், திருப்பூர் குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், குழாயில் இருந்து பல அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. சுமார் 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூருக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் அன்னூர் ரோட்டில் உள்ள நடூர் என்ற பகுதியில் இந்த குடிநீர் குழாயில் அதிக அழுத்தம் காரணமாக திடீரென்று உடைப்பு ஏற்பட்டு பல அடி உயரத்திற்கு தண்ணீர் மேலே பீய்ச்சி அடித்து வீணாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள நடூர் பாலம் அருகே கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல அடி உயரத்திற்கு அருவி போல கொட்டிய குடிநீர்.🌊 pic.twitter.com/VjEd7tYRAX
— Gopalakrishnan Pichai (@Gopalak12365012) May 23, 2025
இது குறித்து குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. தண்ணீர் அதிக அளவு வெளியேறி வருவதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 20 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications