மிடுக்காக மாறப்போகும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம்.. கோவை, நீலகிரி மக்களுக்கு ஜாலி தான்
கோவை: கோவை மாவட்டம் தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் கோவை முன்னேறி கொண்டிருக்கிறது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதததால் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. கோவையின் முக்கிய பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை ரூ.8.63 கோடியில் புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த வேகமாக முன்னேறும் மாவட்டமாக கோவை உள்ளது. தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் கோவை முன்னேறி கொண்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு வருகை புரிகிறார்கள்.

கோவை உள்கட்டமைப்பு
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மைல்கல் பகுதி முதல் மேட்டுப்பாளையம் சாலை நரசிம்மநாயக்கன் பாளையம் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது முதல்கட்டமாக மைல்கல் முதல் மாதம்பட்டி வரையிலான பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதேபோல காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் போன்ற பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையம் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் மேட்டுப்பாளையம் நகரத்தில் உள்ளபேருந்து நிலையம் மிகவும் முக்கியமானது. தினசரி கோவை மற்றும் நீலகிரியில் பல்வேறு பகுதிகளை இணைப்பதுடன் திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம்
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பேருந்து நிலையத்திற்குள்ளேயே வணிக வளாகமும் இருக்கிறது. பழுதடைந்து காணப்படுவதால் அதை மேம்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8.63 கோடி கீழ் பேருந்து நிலையத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. அதன்படி பழைய கடைகளை இடித்துவிட்டு புதிதாக 26 கடைகள் அமைப்பது, பேருந்து ஓடுதளம், கழிப்பறைகள், பயணிகள் நிழற்கூடம் ஆகியவை கட்டப்பட்டு வருகிறது. ஜேசிபி உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் மூலம் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தப் பணிகளை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
80 சதவீத பணிகள்
இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "பேருந்து நிலையம் புனரமைப்புப் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக தாய்மார்கள் பாலூட்டும் அறை, மின் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் முன்பதிவு அலுவலகம் உள்ளிட்டவை கட்டும் பணி தொடங்கவுள்ளது. அந்தப் பணிகளை பிப்ரவரி இறுதிக்குள் முடித்து பேருந்து நிலையத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications