என்னா பேச்சு? மொத்த மேற்கு மண்டலமும் இப்போ திமுக கையில்.. அழுத்திச் சொன்ன அமைச்சர் முத்துசாமி!

Subscribe to Oneindia Tamil

கோவை: மேற்கு மண்டலம் முழுவதும் திமுக கையில் இருப்பதை கோவை மக்கள் நிரூபித்துள்ளனர் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி. நான்கு முனை போட்டி நிலவிய நிலையில், 40க்கு 40 என சொல்லி அடித்துள்ளது திமுக. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளதை கொண்டாடும் வகையில் முப்பெரும் விழா நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

Coimbatore DMK Mk stalin muthusamy

கோவை, செட்டிபாளையம் எல்என்டி புறவழிச்சாலை அருகேயுள்ள பகுதியில் முப்பெரும் விழா நடத்த ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் கொடீசியா மைதானத்தில் ஜூன் 15 ஆம் தேதி முப்பெரும் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறும் இடத்தை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆய்வு செய்து, ஏற்பாடுகளைத் தொடங்கினர்.

கோவை கொடீசியாவில் வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான அரங்கம் அமைக்கும் பணிக்கு வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் முத்துசாமி, "மேற்கு மண்டலம் முழுவதும் திமுகவின் வசமாகி உள்ளது. மேற்கு மண்டலம்.. மேற்கு மண்டலம்.. என பல பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று மொத்த மேற்கு மண்டலமும் திமுக கையில்தான் இருக்கிறது என்பதை கோவை மக்கள் நிரூபித்துள்ளனர்.

திமுகவுக்கு வெற்றியை உறுதி செய்த கோவை மக்களுக்கு அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவினரின் கடுமையான உழைப்புக்கு மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. திமுகவின் முப்பெரும் வெற்றி விழாவை கோவையில் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் விருப்பம் தெரிவித்தார். கொடிசியாவில் ஜூன் 15 ஆம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

திமுக முப்பெரும் விழாவில், தமிழகம் - புதுச்சேரியில் வென்ற திமுக கூட்டணியின் 40 எம்.பி.க்களும் கலந்துகொள்கின்றனர். திமுகவினரின் கடுமையான உழைப்புக்கு மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+