எங்க கன்ட்ரோலை மீறி அழுதுட்டோம்.. இது எங்களுடைய பிரைவசி.. அமைச்சர் சம்பத்குமார்

Subscribe to Oneindia Tamil

கோவை: திரையரங்கில் கண்ணீர் சிந்திய விவகாரத்தை அரசியல் பண்ண விரும்பவில்லை. எல்லாரும் மனிதர்கள் தான். எங்களுக்கும் உணர்வுகள் உள்ளது. 30 வருடத்திற்கு மேலாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் நாங்கள். எங்களையும் தாண்டி நடந்துவிட்டது. இதை அரசியல் செய்ய தேவையில்லை. திரையரங்குகள் உள்ளே தான் கண்ணீர் சிந்திய நிகழ்வு நடைபெற்றது என்று அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் 10 கோடி மதிப்பில் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வைகையில் உள் அரங்கம் மைதானம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சின்ன வேடம்பட்டி சுத்திகரிப்பு நிலையம் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை மக்களுக்கு புரியவைக்கும் பணியில் உள்ளோம்.

minister-sampath-kumar-does-not-wish-to-politicize-the-fact-that-he-shed-tears-in-the-movie-theater

மண்டல வாரியாக கழிவுநீர் சுத்தம் செய்யும் பணி செய்தால் தான் தூய்மையாக வைக்க முடியும். பக்கத்து மாவட்டத்தில், மாநிலத்தில் செய்ய முடியாது. நொய்யல் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் முதல் நடவடிக்கை தான் இது. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்கள் இது கிடையாது. கடந்த கால ஆட்சியை பற்றி பேசும் தேவை இல்லை.

முறைகேடாக 54 பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பணி அமர்த்திய விவகாரத்தில் எந்த அரசியல் அழுத்தமும் இல்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவை பின்பற்றி வருகிறோம். உள் அரங்கம் விளையாட்டு திடலை அனைவரும் பயன்படுத்தும் வகையில் அட்டவணை வகுக்கப்பட்டு வருகிறது. திறமையான விளையாட்டு வீரர்களை உலகத் தரமான வீரர்களாக மற்ற வேண்டும் என்பதில் தற்போதைய அரசு பணி செய்து வருகிறோம்.

செம்மொழி பூங்காவில் 40 கோடி வரை ஊழல் என்பது ஆதாரங்களுடன் புகார் வரும் பட்சத்தில் உரிய விசாரணை நடத்தப்படும். திரையரங்கில் கண்ணீர் சிந்திய விவகாரத்தை அரசியல் பண்ண விரும்பவில்லை. எல்லாரும் மனிதர்கள் தான். எங்களுக்கும் உணர்வுகள் உள்ளது. 2 மாதம் முன்பு உங்களுடன் பயணித்தவர்கள் நாங்கள். இன்று இங்கு அமர்ந்து உள்ளோம். மேலும், 30 வருடத்திற்கு மேலாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் நாங்கள்.

எங்களையும் தாண்டி நடந்துவிட்டது. இதை அரசியல் செய்ய தேவையில்லை. திரையரங்குகள் உள்ளே தான் கண்ணீர் சிந்திய நிகழ்வு நடைபெற்றது. விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறோம். 2026 ஆட்சியில் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும். திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பெரியார் நூலகம் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திறப்புக்கான அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+