ஓய்வெடுக்க சென்ற உதயநிதி! நள்ளிரவில் வந்து நின்ற அமைச்சர் செந்தில்பாலாஜி! திகைத்து போன நிர்வாகிகள்!

நள்ளிரவில் விழா ஏற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் எப்படி நடக்கிறது என்பதை பார்வையிடுவதற்காக நள்ளிரவில் வந்து நின்ற அமைச்சர் செந்தில்பாலாஜியால் அங்கிருந்த நிர்வாகிகள் திகைத்து போய்விட்டனர்.

''மனிதர் தூங்குவாரா தூங்கமாட்டாரா பேய் போல் உழைக்கிறாரே'' என விழா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த கட்சியினர் முணுமுணுத்தனர்.

இதனிடையே அமைச்சர் செந்தில்பாலாஜி விழா ஏற்பாடுகளை பார்வையிட சென்ற போது கோவை மாவட்ட பாரம்பரிய திமுகவினர் யாரும் இல்லை. தேமுதிகவிலிருந்து வந்த தளபதி முருகேசன், அதிமுகவிலிருந்து வந்த கோவை செல்வராஜ், முன்னாள் எம்.பி. நாகராஜன் ஆகிய முன்னாள் ரத்தத்தின் ரத்தம் கோஷ்டிகள் மட்டுமே இருந்தன.

அமைச்சர் செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜியை பொறுத்தவரை சினிமாவை விஞ்சும் அளவுக்கு தாம் நடத்தும் நிகழ்ச்சிகளில் பிரம்மாண்டம் காட்டக் கூடியவர். அதேபோல் தலைமை கொடுக்கும் அசைன்மெண்டை மெனக்கெட்டாவது வெற்றிக்கரமாக முடிக்கக் கூடியவர். இவருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுவது இவரது சுறுசுறுப்பு தான். இந்த சுறுசுறுப்பின் மூலம் தான் கோவை மாவட்ட திமுகவினரை நேற்று நள்ளிரவு திகைக்க வைத்துள்ளார் செந்தில்பாலாஜி.

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

கரூரில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவோடு இரவாக கோவை புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் செந்தில்பாலாஜியும் ஒரே காரில் தான் பயணித்தார். கோவையில் மறைந்த புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். அவரை அவர் தங்கும் விடுதி வரை அழைத்துச் சென்றுவிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி அதன் பிறகு தாமும் ஓய்வெடுக்கச் செல்வார் என்று பார்த்தால் நேராக விழா ஏற்பாடுகள் நடைபெறும் இடத்துக்கு சென்றிருக்கிறார்.

 திமுக நிர்வாகிகள்

திமுக நிர்வாகிகள்

இவர் வரும் தகவல் மாவட்டச் செயலாளர்கள் தளபதி முருகேசன், ரவி ஆகியோருக்கு மட்டுமே முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மூலம் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.பி.நாகராஜன், கோவை செல்வராஜ் ஆகியோருக்கும் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அங்கிருந்த கீழ்நிலை கட்சி நிர்வாகிகள் யாருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி நள்ளிரவில் ஏற்பாடுகளை பார்வையிட வருவார் என்ற தகவல் தெரியாது.

நேரில் ஆலோசனை

நேரில் ஆலோசனை

மேடை அமைப்பு, இருக்கை அமைப்பு, உள்ளிட்டவைகள் குறித்து நேரில் ஆலோசனை வழங்கிவிட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் தான் ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதனிடையே இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், அமைச்சர் செந்தில்பாலாஜி விழா ஏற்பாடுகளை பார்வையிட சென்ற போது கோவை மாவட்ட பாரம்பரிய திமுகவினர் யாரும் இல்லை. தேமுதிகவிலிருந்து வந்த தளபதி முருகேசன், அதிமுகவிலிருந்து வந்த கோவை செல்வராஜ், முன்னாள் எம்.பி. நாகராஜன் ஆகிய முன்னாள் ரத்தத்தின் ரத்தம் கோஷ்டிகள் மட்டுமே இருந்தன என்பது தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+