நோட்டா கூட போட்டி போட்டுட்டு.. 2024 தான் கடைசி தேர்தல்! பாஜகவை வெளுத்து வாங்கிய செந்தில் பாலாஜி!
கோவை : தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் எல்லாம் அடுத்தது நாங்கள்தான்
என்கிறார்கள் எனவும், தமிழகத்தில் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல், பாஜகவிற்கு கடைசித் தேர்தலாக அமையும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கோவை சிவானந்தா காலனி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மணிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நிமிர்வு கலையகம் சார்பில் பறையிசை நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், அமைச்சர் செந்தில் பாலாஜி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா , தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். விசிகவினர் திருமாவளவனுக்கு அன்பளிப்பாக தங்க நாணயங்கள் வழங்கினர்.

செந்தில் பாலாஜி
நிகழ்ச்சியில் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,"தமிழகத்தின் ஒப்பற்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் சுட்டி காண்பித்த மாதிரி இவருடைய திருமணம் விசிக கட்சிதான், இவருடைய பிள்ளைகள் கட்சியின் தொண்டர்கள் தான் என்றார். நிதி அமைச்சர் என்றாலே பா.சிதம்பரம் தான். நாட்டிற்கு உதாரணமாக நல்ல திட்டங்களை வழங்கியவர் பா.சிதம்பரம் என்றார்.நாளை திமுக பொதுக்குழு நடைபெறுகிறது. நாளை தலைவராக பொறுப்பு ஏற்கும் முதல்வருக்கு, எனக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி.

நோட்டாவுடன் போட்டி
முதல்வருக்கு தம்பியாக இருக்கும் தொல்.திருமாவளவன். முதல்வருக்கும் தொல்.திருமாவளவன் இருவருக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. வயது வெறும் எண் மட்டும்தான், அண்ணனுக்கு 60 வயது என்றால் யாராவது நம்புவார்களா?? 18 வயதுடையவர் போன்று ஒடிக்கொண்டு இருப்பவர் அண்ணன் திருமாவளவன். தாடி மட்டும் தான் வெளுத்திருக்கு 60 வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் உரையாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்தில் பேசி வருகிறார். நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் எல்லாம் அடுத்தது நாங்கள்தான் என்கிறார்கள். கோவையில் 100க்கு பூஜ்ஜியம். அரவகுறிச்சியில் போட்டி போட்டார்கள் 1000 பணம் கொடுத்தார்கள். மக்கள் கர்நாடகாவிற்கு திரும்பி போ என மக்கள் பதில் அளித்தார்கள்.

ஒரு பூத்துக்கு ஒரு ஆள்!
ஒரு பூத்துக்கு ஒரு ஆள் காட்ட முடியுமா? வெற்று விளம்பரத்தை சமூக வலைதளங்களை மட்டும் நம்பி அவதூறு பரப்பி வருகிறார்கள். சமூக வலைதளங்கள் எல்லாம் ஓட்டாக மாறாது. ஓட்டு வேண்டும் என்றால் உழைக்க வேண்டும் . இலவசம் வேண்டாம் என்கிறார்கள். தமிழகத்தில் செயல்படுத்தும் திட்டங்களை ஒன்றியத்தில் இருப்பவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் வாக்குறுதிகளாக வழங்கி வருகின்றனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 / 40 நாம் வெற்றி பெறுவோம். நீலகிரி, பொள்ளாச்சி, கோவை நாடாளுமன்ற தொகுதியில் முதல்வர் அறிவிக்கும் வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்
நாம தான் ஜெயிக்கிறோம், நாம மட்டும் தான் ஜெயிக்கிறோம். திருமாவின் சொல்லும் செயலும் நூறு ஆண்டுகாலம் கடந்தும் நிமிர்ந்து நிற்கும். அனைத்து சமுதாயத்திற்கான கருத்துகளை பேசி வருபவர். அரசியல் பணிக்காக அரசு பணியை வேண்டாம் என்றார். அரசு பணியில் இருந்தால் இப்போது ஒய்வு பெற்றிருப்பார். அரசியல் பணி வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும். அப்படி உழைக்க அவரை தியாகம் செய்தவர் திருமா எனவும் அறத்தை அரசியலாக ஆட்சி செய்பவர் முதல்வர் முக ஸ்டாலின்" என்றார்.












Click it and Unblock the Notifications