70 ஜோடிகள் திருமணம்! சொதப்பிய கோவை செல்வராஜ்! கட்சிக்காரங்க வழிவிடுங்க! செந்தில்பாலாஜி டென்ஷன்!
70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கோவை: முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 70 ஜோடிகளுக்கு தனது தலைமையில் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.
இந்த திருமண விழாவில் ஹோஸ்டாக மாறி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோவை செல்வராஜ் ஒரு கட்டத்தில் சொதப்பியதால் டென்ஷனான அமைச்சர் செந்தில்பாலாஜி நேராக எழுந்து வந்து அவரே மைக்கை பிடித்து கோபத்தை உமிழ்ந்தார்.
கட்சிக்காரங்க வழிவிடுங்க, மணமக்கள் உறவினர்களுடன் ஒவ்வொரு ஜோடியா மேடைக்கு வாங்க என அவரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கத் தொடங்கினார். இதனால் கோவை செல்வராஜ் சிறிது நேரம் ஆடி போய்விட்டார்.

ஸ்டாலின் பிறந்தநாள்
முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி கோவையில் 70 ஏழை ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை திருமணம் நடத்தி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோவை செல்வராஜ், ஒரு கட்டத்தில் சொதப்பியதால் டென்ஷனான அமைச்சர் செந்தில்பாலாஜி நேராக மைக் அருகே சென்று மணமக்களை ஒவ்வொரு ஜோடியாக மேடைக்கு வரச் சொல்லுங்க என்றார்.

செந்தில்பாலாஜி டென்ஷன்
இதையடுத்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கோவை செல்வராஜை ஒதுங்கச் சொல்லிவிட்டு அவரிடம் இருந்த மைக்கை வாங்கி ஒவ்வொரு ஜோடியும் தங்கள் உறவினர்களுடன் மேடைக்கு வாங்க என அழைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அப்போது கட்சிக்காரர்கள் கும்பலாக நின்று வழியை மறித்ததை பார்த்த செந்தில்பாலாஜி, ஓபன் மைக்கிலேயே கட்சிக்காரங்க வழிவிடுங்க, நிர்வாகிகள் வழிவிடுங்க என கடுகடுத்தார்.

ரவியின் ஆர்வக்கோளாறு
இதனிடையே மணமக்களுடன் மேடையேறிய இளம் பெண் ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் செல்ஃபி எடுப்பதற்காக தனது மொபைலை எடுத்து கிளிக் செய்ய முயற்சித்தார். அப்போது செல்ஃபியெல்லாம் எடுக்கக் கூடாது என அந்தப் பெண்ணிடம் கடுகடுத்தார் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ரவி. சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி விடாத கதையாக செல்ஃபி எடுப்பதற்கு அமைச்சர் உதயநிதியே எந்த மறுப்பும் சொல்லாமல் கூலாக நின்ற நிலையில் ஆர்வக்கோளாறு நிர்வாகி அலப்பறை செய்தார்.

மூத்த முன்னோடிகள்
கோவை மாவட்ட திமுகவை ஒரு காலத்தில் கட்டி காத்த கண்ணப்பனும், பொங்கலூர் பழனிசாமியும் மேடையில் இருக்கும் இடம் தெரியாமல் நின்று கொண்டிருந்தனர். அண்மையில் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த பிரமுகர்கள் தான் இங்கும் அங்குமாக ஓடியாடிக் கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications