பாட்டிலுக்கு 10 ரூபா To 1000 கோடி புள்ளி! இப்போ எதுவுமே செய்ய முடியலை பாவம்! அமைச்சர் விக்னேஷ் சுளீர்

Subscribe to Oneindia Tamil

கோவை: மதுவிலக்கு துறையில் நடைபெற்ற முறைகேடுகள் மூலம் கடந்த ஆட்சியில் பலன் பெற்ற 1000 கோடியில் தொழில் செய்து வந்த உயர்மட்ட புள்ளிகள், 10 ரூபாய் கூடுதலாக பெற்று வந்த சில பணியாளர்கள் தற்போது தவெக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முறைகேடான வழியில் தங்களை அணுக முயன்ற பெரிய பெரிய லாபிக்களால் இந்த ஆட்சியில் எதுவும் செய்ய முடியவில்லை என தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.

கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள கதர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. இதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

TVK TASMAC

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ்," போதைப் பொருட்களால் கல்லூரி மாணவர்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கோவை காவல்துறையினர் ஏற்பாடு செய்த 'ட்ரக் ஃபிரீ' மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றோம்.

அமைச்சர் விக்னேஷ்

போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துபள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடமும் கொண்டு செல்ல நடவடிக்கைகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் யார் மூலமாக ஊடுருவினாலும், அதுகுறித்து உடனடியாகக் கல்லூரி நிர்வாகத்திற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ மாணவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

போதைப் பொருள்

சட்டம் இயற்றுவதன் மூலம் மட்டுமே போதைப் பொருள் பயன்பாட்டை உடனடியாக முற்றிலும் நிறுத்திவிட முடியாது. பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்திலிருந்தே மாணவர்களுக்கு உளவியல் ரீதியாகத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும்போது, வருங்காலத்தில் தமிழ்நாட்டில் நிச்சயம் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும்.

மதுவிலக்கு

மதுபாட்டில்களில் இடம்பெற்றுள்ள மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை, அனைத்து டாஸ்மாக் கடைகளின் முகப்புப் பலகைகளிலும் இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மதுவிலக்குத்
துறையில் ஊழல் நடைபெறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கிறீர்கள். கடந்த ஆட்சிக் காலத்தில்தான் இந்தத் துறையில் ஊழல்கள் நடைபெற்றன. தற்போது மதுவிலக்கு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன.

தவெக ஆட்சி

இதனால், ரூ.1,000 கோடியில் தொழில் செய்து வந்த உயர்மட்டப் புள்ளிகள் முதல், ரூ.10 கூடுதலாகப் பெற்று வந்த சில பணியாளர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். முறைகேடான வழிகளில் தங்களை அணுக முயன்ற பெரிய பெரிய லாபிக்களால் இந்த தவெக ஆட்சியில் எதுவும் செய்ய முடியவில்லை. தற்போதைய அரசு மக்கள் நலனுக்காகவும் மாற்றத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு.

டாஸ்மாக்

இங்கு பணத்தைக் கொடுத்து எதையும் சாதிக்க முடியாது. நேரடியாக அணுகிப் பலனளிக்காததால், தற்போது அரசின் பிம்பத்தைச் சிதைக்கும் நோக்கில் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புகின்றனர். இதுபோன்ற போலிப் பிரச்சாரங்களுக்கும் அவதூறுகளுக்கும் அரசு ஒருபோதும் அஞ்சாது; மாற்றம் நிச்சயம் நடந்தே தீரும். சிவகங்கை வேலுநாச்சியார் நினைவிடத்திற்கு அருகிலுள்ள இடத்தில் டாஸ்மாக் கடை செயல்படுவது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் விசாரணை நடத்தப்பட்டது.

மதுக்கடை

அந்த இடம் கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமானது என்பதால், அவர்கள் வேறொருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இருப்பினும், அது வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னப் பகுதி என்பதால், அங்கு செயல்படும் கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+