வானதி இங்கே.. கொடுத்த வாக்குறுதி எங்கே? கோவையில் ஆர்ப்பாட்டம்! களத்தில் இறங்கிய மக்கள் நீதி மய்யம்!
கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன். பின்னர் அரசியல் பணிகளை குறைத்துக்கொண்டு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த கமல்ஹாசன், மீண்டும் அரசியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், 2021 சட்டமன்ற தேர்தலின் போது தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் நீதி மய்யம் குற்றம்சாட்டியுள்ளது. கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை கண்டித்து இன்று உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் மநீம சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெறும் இந்த அர்ப்பாட்டத்தில் மநீம மாநில இளைஞரணி செயலாளர் கவிஞர் சினேகன் கண்டன உரையாற்றுகிறார். மநீம மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 'வானதிக்கு லாபம்.. மக்களுக்கு நாமம்' என்றும், கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு, அவை எங்கே என்றும் கேள்வி எழுப்பும் வகையில் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.
இதையொட்டி, #வானதிஇங்கே_வாக்குறுதி எங்கே என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர், வானதி சீனிவாசன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பதிவிட்டு வருகின்றனர்.

-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications