Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும்.. அப்போதுதான் நாடு சுபிட்சமாக இருக்கும் - ஓபிஎஸ் ஃபுல் சப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறது. மோடி மீண்டும் பிரதமர் ஆனால் இந்தியா சுபிட்சமாக இருக்கும் எனக் கூறியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

சென்னையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி இன்று நடத்திய அதேநேரத்தில், கோவையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். லோக்சபா தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதன்படி கோவையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார் ஓபிஎஸ்.

Modi should become prime minister again: O Panneerselvam said in press meet

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், "பொதுக்குழு வழக்கு வரும் ஜனவரி 19 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கில் பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக தெளிவான முடிவுகள் கிடைக்கும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

என் மீது அவர்கள் என்ன குற்றச்சாட்டை சொல்கிறார்கள்? என்னை கட்சியை விட்டு நீக்குவதற்கு அவர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள்? நான் யாருக்கு நம்பிக்கை துரோகம் செய்தேன் என்பதை அவர்களால் சொல்ல முடியுமா? இப்போதும் நான் அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறேன். நாம் ஒன்றுபட்டால்தான் வெற்றி அடையமுடியும். புரிய வேண்டியவர்களுக்கு இது புரியும். ஆனால் அதை காதில் வாங்க மறுக்கின்றனர்.

Modi should become prime minister again: O Panneerselvam said in press meet

மக்களின் அபிமானம், தொண்டர்களின் அபிமானம் பெற வேண்டும் என நான் சொல்கிறேன். அதை அவர்கள் கேட்கமாட்டேன் என்கின்றனர். நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு செயல்படுவதாக சொல்பவன் ஒரு முட்டாள். திமுக ஆட்சி குறித்து தினந்தோறும் அறிக்கைகள் கொடுத்து வருகிறேன். சட்டமன்ற விதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி மட்டும் தான் இருக்கிறது. எதிர்கட்சி துணைத்தலைவர் என்பது இல்லை. சபாநாயாகர் அப்பாவு நினைத்தால் கொடுக்கலாம். அவர் வேண்டாம் என்று நினைத்தால் இல்லை. அது சபாநாயகரின் தனிப்பட்ட அதிகாரம்.

நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் நிலைப்பாட்டை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறது. எனவே மீண்டும் நரேந்திர மோடி தான் பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். மோடி மீண்டும் பிரதமர் ஆனால் இந்தியா சுபிட்சமாக நன்றாக இருக்கும். பாஜகவுடன் உறவு சுமூகமாக உள்ளது" எனக் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+