5 வயது மகள், 3 வயது மகனை, தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தா(பே)ய்.. அம்பலமான பாலக்காடு கள்ளக்காதல்

Subscribe to Oneindia Tamil

கோவை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனோன்பாறை சூராங்காடு பகுதியில் வசிக்கும் ஜான் குமார் என்பவரின் மனைவி நிவேத்யா, கள்ளக்காதலுக்காக செய்த காரியம், மொத்த கேரளாவையும் உலுக்கி உள்ளது. அக்காள், தம்பி இறந்த வழக்கில், தண்ணீரில் மூழ்கடித்து குழந்தைகளை கொன்றதாக தாய் நிவேத்யா கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டியதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ளக்காதல் என்ன செய்யும். பெற்ற பிள்ளைகளையே எமனாக பார்க்கும்.. உறவினர்களை, பெற்றவர்களை, எதிரியாக பார்க்க வைக்கும்.. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் கள்ளக்காதல் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அது ஒரு வழிப்பாதை, உள்ளே சென்றவர்கள் மீளவே முடியாத பள்ளத்தில் போய் வீழ்ந்து விடுவார்கள். அப்படி பலர் சிக்கி உள்ளனர். அப்படி ஒரு மோசமான சம்பவம் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் நடந்துள்ளது.

Mother who killed her children because they stood in the way of her illicit affair in Palakkad

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனோன்பாறை சூராங்காடு பகுதியில் 36 வயதாகும் ஜான் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரது மனைவி நிவேத்யா (29). இவர்களுக்கு ஜெனிபர் ஜூலியட் (வயது 5) என்ற மகளும், ராபின் கிறிஸ்டோபர் (3) என்ற மகனும் உள்ளனர். ஜெனிபர் ஜூலியட் ஒரு பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் ஜெனிபர் ஜூலியட், ராபின் கிறிஸ்டோபர் ஆகிய 2 பேரும் கடந்த செப்டம்பர் 28ம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் குளியலறையில் உள்ள தொட்டியில் மூழ்கி கிடந்துள்ளனர். இதையடுத்து தொட்டியில் குழந்தைகள் தவறி விழுந்து விட்டதாக கூறி நிவேத்யா சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தைகளை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெனிபர் ஜூலியட், ராபின் கிறிஸ்டோபர் ஆகிய 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். முதல் கட்ட விசாரணையில், வீட்டில் விளையாடிய போது அக்காள், தம்பி தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இதுதொடர்பாக நிவேத்யாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் தந்தார். அவர் ஒவ்வொரு முறையும் ஒரு தகவலை கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தது.

நிவேத்யாவுக்கு ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதற்கு இடையூறாக குழந்தைகள் இருப்பதாக கருதி உள்ளனர். இதனால் குழந்தைகளை தீர்த்துக்கட்ட நிவேத்யா முடிவு செய்துள்ளார. அதன்படி, சம்பவத்தன்று ஜான் குமார் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் இருந்த குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நிவேத்யா கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருக்கவும், போலீசில் சிக்காமல் இருக்கவும் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நிவேத்யாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரது கள்ளக்காதலனுக்கு கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+