கொங்கு மண்டலத்தை உலுக்கிய My V3 ads மோசடி! பல ஆயிரம் கோடி! வெளியே கொண்டு வந்த பாமக தலை! ஷாக் பின்னணி
கோயம்புத்தூர்: 'My V3 ads' நிறுவனம் கொங்கு மண்டலத்தில் எப்படி எம்எல்எம் முறைகேடு நடைபெற்றது என்று போலீசில் புகார் அளித்த பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி விளக்கம் கொடுத்துள்ளார்.
பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதிதான் இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்தவர். அவர் கொடுத்த புகாரில், இது ஒரு மோசடி. பொன்சி முறை மோசடி. நாம் ஒருவரை சேர்க்க வேண்டும். அவர் ஒருவரை சேர்க்க வேண்டும். இப்படி சேர்ப்பதன் மூலம் பணம் வரும். ஆள் சேர சேர பணம் வரும் என்பதே இந்த மோசடியின் பின்னணி. இது இந்தியாவில் முழுக்க முழுக்க தடை செய்யப்பட்டது. இந்த மோசடியில் வேறு மாதிரி திட்டம் போட்டுள்ளனர்.

மோசடி எப்படி நடந்தது?: அவர்கள் தினமும் யூ டியூபில் விளம்பரம் கொடுப்பார்கள். அந்த விளம்பரத்தை பார்க்க வேண்டும். அவ்வளவுதான். இலவசமாக விளம்பரத்தை பார்த்தால் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். அதுவே 3000 கட்டி பார்த்தால் 6000 கிடைக்கும். அதேபோல் ஒவ்வொரு தொகை அதிகமாக கட்டி பார்க்க பார்க்க அதிகமாக பணம் வரும்.
இப்படி 30 ஆயிரம், 50 ஆயிரம் என்றெல்லாம் ;பணம் கட்டி பார்த்து உள்ளனர். இப்படி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கூட கொடுத்து பலர் சேர்ந்து உள்ளனர் . தனக்கு கீழே 12 பேரை சேர்த்து விட்டால் அவர்களுக்கு 1800 ரூபாய் தினமும் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 48 ஆயிரம் மாதம் வழங்கப்படும் என்று கூறி உள்ளனர்.
ஆனால் இப்படி சொல்லப்பட்ட பணம் எதையும் கொடுக்காமல் மோசடி செய்தனர். இது தொடர்பாகவே போலீசிடம் புகார் கொடுத்தோம், என்று பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி விளக்கம் கொடுத்துள்ளார்.
My V3 ads' நிறுவனம் மீதான புகார்: நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக 'My V3 ads' நிறுவனம் மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிறுவனம் ஏன் சர்ச்சைக்கு உள்ளனாது.. நிறுவனம் உருவாக்கப்பட்டது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
யூடியுபில் விளம்பரம் பார்த்தால் லாபம் கிடைக்கும் என்றுதான் மோசடி செய்துள்ளனர். இது 12 லெவல் உள்ள நூதன MLM மோசடி ஆகும். அதாவது உங்களிடம் இந்த நிறுவனத்தின் தலைவர் முதலில் யூடியுபில் விளம்பரம் பார்க்க சொல்வார். நீங்கள் இதில் இணைய ஒரு கட்டணம். அதன்பின் நீங்கள் ஒருவரை சேர்த்து விட வேண்டும். அவர் ஒருவரை சேர்க்க வேண்டும்.
எப்படி மோசடி?: இப்படியே உங்களுக்கு கீழ் 12 பேர் சேர்க்கப்பட வேண்டும். இவர்களை சேர்க்க சேர்க்க கமிஷன். அடுக்கடுக்காக கமிஷன் வழங்கப்படும். இதில்தான் பலர் கட்டணம் கொடுத்து சேர்ந்துள்ளனர். இந்த நவீன எம்எல்எம் மோசடியில் பலர் சேர்ந்துள்ளனர். இதில் முறைகேடு நடப்பதாக ஒருவர் புகார் அளித்த நிலையில், அந்த புகார் தொடர்பாக கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் போராட்டம்: இந்த நிலையில்தான் நேற்று அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் போராட்டம் செய்தனர். கடைசியில் அது மக்களே இல்லை காசு கொடுத்து அழைத்துவரப்பட்ட கும்பல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இருந்து MLM நிறுவனத்துக்கு ஆதரவாக பலர் காசு கொடுத்து கோவையில் திரட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications