திடீர் நெஞ்சுவலி.. பல்லாயிரம் கோடி சுருட்டிய.. My V3 ads நிறுவனர் மருத்துவமனையில் அனுமதி.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: MLM மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட MyV3Ads நிறுவனத்தின் நிறுவனர் விஜயராகவனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளதாம். மதுரையில் வைத்து போலீசார் கைது செய்ய இருந்த நிலையில் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்

நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக 'My V3 ads' நிறுவனம் மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிறுவனம் ஏன் சர்ச்சைக்கு உள்ளனாது.. நிறுவனம் உருவாக்கப்பட்டது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

MY V3 ads MLM scam: The cheater gets sudden heart ache after getting arrested by police

விளக்கம்: பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதிதான் இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்தவர். அவர் கொடுத்த புகாரில், இது ஒரு மோசடி. பொன்சி முறை மோசடி. நாம் ஒருவரை சேர்க்க வேண்டும். அவர் ஒருவரை சேர்க்க வேண்டும். இப்படி சேர்ப்பதன் மூலம் பணம் வரும். ஆள் சேர சேர பணம் வரும் என்பதே இந்த மோசடியில் பின்னணி. இது இந்தியாவில் முழுக்க முழுக்க தடை செய்யப்பட்டது. இந்த மோசடியில் வேறு மாதிரி திட்டம் போட்டுள்ளனர்.

மோசடி எப்படி நடந்தது?: அவர்கள் தினமும் யூ டியூபில் விளம்பரம் கொடுப்பார்கள். அந்த விளம்பரத்தை பார்க்க வேண்டும். அவ்வளவுதான். இலவசமாக விளம்பரத்தை பார்த்தால் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். அதுவே 3000 கட்டி பார்த்தால் 6000 கிடைக்கும். அதேபோல் ஒவ்வொரு தொகை அதிகமாக கட்டி பார்க்க பார்க்க அதிகமாக பணம் வரும்.

இப்படி 30 ஆயிரம், 50 ஆயிரம் என்றெல்லாம் பணம் கட்டி பார்த்து உள்ளனர். இப்படி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கூட கொடுத்து பலர் சேர்ந்து உள்ளனர் . தனக்கு கீழே 12 பேரை சேர்த்து விட்டால் அவர்களுக்கு 1800 ரூபாய் தினமும் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 48 ஆயிரம் மாதம் வழங்கப்படும் என்று கூறி உள்ளனர்.

ஆனால் இப்படி சொல்லப்பட்ட பணம் எதையும் கொடுக்காமல் மோசடி செய்தனர். இது தொடர்பாகவே போலீசிடம் புகார் கொடுத்தோம், என்று பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி விளக்கம் கொடுத்துள்ளார்.

விளக்கம் : 'My V3 ads' நிறுவனம் கொங்கு மண்டலத்தில் எப்படி எம்எல்எம் முறைகேடு நடைபெற்றது என்று போலீசில் புகார் அளித்த மக்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

அதில், விஜயராகவன் என்ற நபர்தான் இந்த நிறுவனத்தை தொடங்கினார். வெறும் 600 ரூபாய் காட்டினால்.. மாதம் 1600 கிடைக்கும் என்று கூறினார். ஒரு பொருளை 600க்கு வாங்கி விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என்றார். அதேபோல் 18 ஆயிரம் ரூபாயை கட்டி சேருங்கள். உங்களுக்கு கீழ் 18 ஆயிரம் கட்டும் வகையில் 6 பேரை சேருங்கள்.

உங்களுக்கு 40 ஆயிரத்திற்கு மேல் வருமானம் கிடைக்கும். நீங்கள் 6 பேரை சேர்க்க முடியவில்லை என்றால்.. அதற்கு பதிலாக இப்போதே 6 பின் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் . அந்த பேருக்கு கொடுக்க வேண்டிய மொத்த வருமானம் உங்களுக்கு கிடைக்கும். அதாவது 1.08 லட்சம் ரூபாய கொடுத்து பின் வாங்கி வைத்துக்கொண்டால் மாதம் ரூ. 40000 கிடைக்கும் என்றார்.

சில நாட்களில் அந்த திட்டம் 20 ஆயிரம் என்று அந்த திட்டம் உயர்த்தப்பட்டது. மீண்டும் திட்டத்தின் விலை மதிப்பு உயரும் என்று கூறினார். இப்படி கூறிய பின் உடனே பல ஆயிரம் இப்படி லட்சம் லட்சமாக பணம் கொடுத்தனர். பணம் வாங்கிய மறுநாளே விஜயராகவன் அந்த நிறுவனத்தை மூடினார். விஜயராகவனை குரு ஜி என்பார்கள். இவர்தான் வி3 ஆட்ஸ் தொலைக்காட்சி பொய்யான நிறுவனம் நடத்தப்பட்டு மேல்கூறிய மாதிரி மக்களை ஏமாற்றினர்.

இப்போது அந்த நிறுவனத்தை மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தை பொய்யாக நடத்தி வருகின்றனர். இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான பேர் இதில் ஏமாற்றப்பட்டு உள்ளனர். விஜயராகவன் என்பவர்தான் இந்த நிறுவனங்களை நடத்தி ஏமாற்றி உள்ளார். நாங்கள் ஏற்கனவே ஒரு ஆடிட்டர் வழியாக புகார் அளித்தோம். கடைசியில் அந்த ஆடிட்டரை பயமுறுத்தி அவருக்கு காசு கொடுத்து தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டனர்.

கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் இந்த விஜயராகவன் மூலம் ஏமாற்றப்பட்டு உள்ளார். ஒரு ஆளிடம் 1.8 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி இருக்கலாம் என்று புகார் அளித்த மக்கள் பேட்டி அளித்துள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரம் கோடி ரூபாய் இதில் மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+