வாடிக்கையாளர்கள் ஷாக்: “நம்மை பார்த்து கூகுள், ட்விட்டரே நடுங்குது.. இதெல்லாம் சும்மா”.. MyV3 ஆடியோ!
கோவை: MyV3 Ads நிறுவனர் சக்தி ஆனந்த் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், வாடிக்கையாளர்களுக்கு ஆடியோக்களை அனுப்பி வருகின்றனர். அதில், கூகுள், ட்விட்டரே நம்மைப் பார்த்து பயந்தனர், இதெல்லாம் பிரச்சனையே இல்லை எனப் பேசியுள்ளனர்.
கோவையில் இருந்து இயங்கி வந்த MYV3 Ads ஆன்லைன் நிறுவனம் மீது கோவை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பொதுமக்களிடம் 360 ரூபாய் முதல் ரூ.1.20 லட்சம் வரை முதலீடுகளைப் பெற்று, மொபைல் ஆப்பில் விளம்பரம் பார்த்தால், நாள்தோறும் பணம் தருவதாகவும், பல மடங்கு சம்பாதிக்கலாம் என்றும் கூறி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் தினரி 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும், செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.
லட்சக்கணக்கான முதலீட்டாளர்களை மோசடி செய்து ஏமாற்றி வருவதாக அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் கோவையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்த MyV3 Ads நிறுவன எம்.டி சக்தி ஆனந்த், தங்கள் நிறுவனத்தின் மீது சிலர் வீண் பழி போட முயல்வதாக குற்றம்சாட்டி, ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து காவல்துறையினர், அவர்களை கலைந்து செல்லுமாறு பலமுறை வலியுறுத்தியும் கேட்காததால், சக்தி ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சக்தி ஆனந்த் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து சக்தி ஆனந்த் நேற்று இரவோடு இரவாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவரது ஆதரவாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே, நேற்று இரவு முதல் MyV3 Ads செயலி இயங்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, MyV3 Ads செயலி முடக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, அந்தச் செயலியின் பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், இன்று காலை முதல் மீண்டும் அச்செயலி இயங்கத் தொடங்கியுள்ளது. செயலியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், MyV3 Ads நிறுவனத்தில் பணியாற்றும் நபர் ஒருவர், தனக்குக் கீழ் செயல்பட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆடியோ செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். My V3 Adsக்கு எதிராக கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட்டபோதே, அதை முறியடித்து வென்றோம், இப்போது வந்திருப்பது ஒரு பிரச்சனையே இல்லை என்கிற ரீதியில் அவர் பேசியுள்ளார். இந்த ஆடியோ, வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பப்பட்டு வருகிறது.
ஆந்த ஆடியோவில் பேசியுள்ள நபர், "இதைவிட பெரிய பிரச்சனைகளை எல்லாம் பார்த்துள்ளோம். நமது செயலியை லாஞ்ச் செய்து சிறிது நாட்களிலேயே கூகுள் ப்ளே ஸ்டோரில் நமது ஆப்பையே தூக்கினார்கள். அது எப்படி இத்தனை லட்சம் பேர் டவுன்லோடு செய்யலாம் என சந்தேகப்பட்டு நமது செயலியை நீக்கிவிட்டது கூகுள். அதன்பிறகு, 2 நாட்களில் கூகுள்காரனே மன்னிப்பு கேட்டு, நமது ஆப்பை ப்ளே ஸ்டோரில் மீண்டும் வெளியிட்டான்.
அதன்பிறகு ட்விட்டருக்கும் நமக்கும் ஒரு பஞ்சாயத்து நடந்தது. ட்விட்டர் லோகோவும் MyV3 லோகோவும் ஒன்று போலவே இருப்பதாக பிரச்சனை வந்தது. ட்விட்டரில் இருப்பது பேசும் குருவி, Myv3 குருவி பாடும் குருவி. நாம் ஆரம்பத்தில் சண்டை போட்டதே பெரிய பெரிய நிறுவனங்கள் தான். இப்போது சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் வந்துள்ளார்கள். MyV3-யை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை, நம்பாமல் கெட்டவர்கள் லட்சக்கணக்கான பேர். அதனால், எந்த பயமும் வேண்டாம். ஏற்கனவே செய்யும் வேலையை தொடர்ந்து சிறப்பாகச் செய்யுங்கள்" என அந்த ஆடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications