பிள்ளையாரை போட்டு உடைக்கறீங்க.. தீண்டாமை சுவரை உடைக்க மாட்டீங்களா?.. கார்த்திகா நறுக் கேள்வி!
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை கட்சியை சேர்ந்த கார்த்திகா சூலூரில் பிரச்சாரம் செய்தார்
சூலூர்: "பிள்ளையார் சிலையை போட்டு உடைக்கறீங்க, ஏன் தீண்டாமை சுவர்களை உடைக்க மனசு வரல? இந்த கேள்விக்கு பதில் இருக்கா?" என்று நாம் தமிழர் கட்சி கார்த்திகா நறுக்கென கேள்வி எழுப்பி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியில எல்லாருமே நல்ல பேச்சாளர்கள்போல. மண் பிரச்சனை முதல் மக்கள் பிரச்சனை வரை அலசி ஆராய்ந்து தெளிந்து தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
இப்போது 4 தொகுதிகள் இடைத்தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. இதற்காக சூலூரில் மகளிர் பாசறை கார்த்திகா வாக்கு சேகரித்தார். அப்போது அவரது மிரட்டல் உரைதான் இது:

அயோத்தி தாசர்
"234 தொகுதிகள் இருக்கு. இதில், 118 சீட் இருந்தால்தான் பெரும்பான்மை நிரூபிக்க முடியும். அதிமுகவுக்கு 4 தொகுதிகள் தேவை. எதிர்கட்சிகளுக்கு 21 இடம் தேவை. ஆனால் அது அவர்களால் முடியாது. இரட்டை மலையார், அயோத்திதாசர் பற்றியும் விவாதிக்க முடியுமா என்று திமுக கேட்கிறது. சாதி ஒழிப்பு போராளிகள் நீங்க யாரை வேணும்னாலும் கூட்டிட்டு வாங்க. விவாதிக்க ஆ.ராசா வந்தால்கூட பரவாயில்லை.

ஏன் உடைக்கல?
சாதியை கண்டுபிடிச்சது ஆரியர். ஆனால் ஆரியர் வழிபாட்டு கடவுளான பிள்ளையார் சிலையை போட்டு உடைக்கறீங்க. பரவாயில்லை.. ஆரிய எதிர்ப்பை காட்டிட்டீங்க.. சந்தோஷம்.. சரி.. ஆனால், சாதிய செயல்படுத்தி காட்டிறீங்களே, தீண்டாமை சுவர்களை கிராமந்தோறும் கட்டி வச்சாங்களே, அதை ஏன் யாரும் உடைக்கல?

பிள்ளையார் சிலை
பிள்ளையார் சிலையை போட்டு உடைக்கறீங்க, ஏன் தீண்டாமை சுவர்களை உடைக்க மனசு வரல? இந்த கேள்விக்கு பதில் இருக்கா? அப்படி தீண்டாமை சுவரை உடைச்சால் என்னாகும் தெரியுமா? தீண்டாமை சுவரை கட்டின வாரிசுகள், அதிமுகவுக்கும் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் கட்சி நிதி கொடுக்காது. இதுதான் இவர்களின் போலி சாதி ஒழிப்பு, இதுதான் இவர்களின் போலி ஆரிய எதிர்ப்பு!

ஆ.ராசா.. வாங்க..
இந்த கேள்விக்கு பதில் இருந்தால் ஆ.ராசா வாங்க, விவாதிப்போம்! சாதி ஒழிப்பு பேசுதே, அதிமுகவும், திமுகவும், இந்த தீண்டாமையை ஏன் ஒழிக்கல, ஏன் எதிர்க்கல? ஒரு தீண்டாமை சுவர்கூட ஒழிக்கல. இன்னும் எவ்வளவு காலத்துக்கு தமிழக மக்களை ஏமாத்த போறீங்க?

காத்து வாங்கும்
கல்வி கடன் ரத்து செய்றோம்னு சொல்றீங்க, சரி, ஆனால் 2019-ஜுன் மாசம் பிள்ளைங்க படிக்க வருவாங்களே, அவங்க கடன் வாங்காம படிக்க முடியுமா? அந்த நிலையை உருவாக்க முடியுமா? அப்படி மட்டும் மாத்திட்டா என்னாகும் தெரியுமா, அதிமுக, திமுக முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் திறந்து வெச்சிருக்கிற கல்வி நிலையங்கள் காத்து வாங்கும்.

மழுங்கிய மூளை
28 ஆயிரம் பள்ளிகளை அந்த காலத்துல காமராஜர் ஐயா திறந்தார். ஆனா இப்போ அப்படியா இருக்கு? முதல்ல கல்வி மறுபடியும் அரசாங்கத்துக்கே வரணும். ஆரம்ப பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை இலவசமா தரணும். மதுவை குடிக்க குடிக்க வெச்சு மூளையை மழுங்கடிச்சிட்டாங்க. தமிழக உரிமைகள் பற்றி யோசிக்ககூட முடியாத அளவுக்கு ஆயிட்டாங்க. ஒரு தமிழன் தவிச்சாலும், மொத்த தமிழனுக்கும் வலிக்கணும். சாதி, மொழியை தூக்கி தூர போடு!" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications