"அந்த" 2 வேலையை மட்டும் திமுக செஞ்சுட்டா லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் போட்டி இல்லை-சீமான் நிபந்தனை
கோவை: இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை, காவிரி நீர் தராத காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என இரண்டையும் திமுக செய்துவிட்டால் வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது என அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது: இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இஸ்லாமிய சிறை கைதிகளை திமுக அரசு விடுதலை செய்து காண்பிக்கட்டும். இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்துவிட்டால் லோக்சபா தேர்தலிலேயே நாம் தமிழர் கட்சி போட்டியிடாது.

அதேபோல காவிரி நீர் பிரச்சனை. காவிரி நீர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர கர்நாடகா காங்கிரஸ் அரசு மறுக்கிறது. அப்படியான காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு காங்கிரஸை திமுக கழற்றிவிடட்டும். இதனை திமுக செய்துவிட்டால் நாம் தமிழர் கட்சி 2024-ம் ஆண்டு தேர்தலிலேயே போட்டியிடமாட்டோம்.
அதேபோல ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என கூறுகின்றனர். அப்படி பிரதமர் மோடி, ராமநாதபுரத்தில் போட்டியிடும் நிலை உருவானால் திமுக எதிர்த்து போட்டியிட்டு வேட்பாளரை நிறுத்தட்டும். ராமநாதபுரத்தில் திமுக வேட்பாளர், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சி திமுக வேட்பாளரை ஆதரிக்கும். இதை திமுக செய்ய தயாரா? இவ்வாறு சீமான் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications