படிக்க வச்சது எங்க தாத்தா காமராஜர்.. குடிக்க வச்சது உங்க அப்பா கருணாநிதி.. ஸ்டாலினை சீண்டிய சீமான்
சூலூர் பிரச்சாரத்தில் முக ஸ்டாலினை சீமான் கடுமையாக விமர்சித்தார்.
கோவை: "திராவிட கட்சிகள் எல்லாம் ஆட்சிக்கு வரவில்லை என்றால் சீமான் எல்லாம் இப்படி பேசிவிடுவாரா? படித்து இருப்பாரா என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். படிக்க வெச்சது எங்க தாத்தா காமராஜ்.. குடிக்க வெச்சது உங்க அப்பாவும், நீங்களும்தானே" என்று திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளர் சீமான்!
சூலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் விஜய ராகவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
"கட்சிகள் சாதிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளரின் மகனை, அதிமுக மாவட்ட செயலாளரின் மகளுக்கு திருமணம் செய்ய முடியுமா? முதல்ல ஸ்டாலினின் பெருமையை பற்றி பேசு!

புரட்சியாளர் கூட்டம்
கருணாநிதியின் மகன் என்பதை தாண்டி ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கு? கருணாநிதிக்கே தகுதி இல்லைன்னு சொல்றேன்.. இதுல மகனுக்கு என்ன தகுதி இருக்கு? ஸ்டாலின் என்ன ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலினா? என்ன ஸ்டாலின்? பிழைப்புக்காக நக்கி பிழைக்கிற கூட்டம் இல்லை நாங்கள். என் இன மக்களை பிழைக்க வைக்கிற புரட்சியாளர் கூட்டம் இது.

சொரணை இல்லை
ஆட்சியை எப்படியாவது காப்பாற்றணும்னு எடப்பாடி தரப்பு நினைக்கிறார்கள், அதை கவிழ்க்கணும்னு ஸ்டாலின் தரப்பு நினைக்கிறார்கள். ஆனா நாங்க எப்படியாவது மக்களை காப்பாற்றணும்னு நினைக்கிறோம், இதுல கோவப்பட என்ன இருக்கு ராஜா? அவ்வளவு மானம் இருக்குன்னா, திமுகவே இருக்கக்கூடாதே ராஜா! அந்த கட்சியில சூடு, சொரணை இல்லாதவர், சோத்துல உப்பு போட்டு திண்ணாதவர், நல்ல தண்ணி குடிக்காதவர்.. இப்படித்தான் அங்க இருப்பாங்க.

காமராஜ்
திராவிட கட்சிகள் எல்லாம் ஆட்சிக்கு வரவில்லை என்றால் சீமான் எல்லாம் இப்படி பேசிவிடுவாரா? படித்து இருப்பாரா என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். படிக்க வெச்சது எங்க தாத்தா காமராஜ்.. குடிக்க வெச்சது உங்க அப்பாவும், நீங்களும்தான்!

மிரட்டல்
இப்போ இந்தியாவுக்கே நான்தான் பெரிய பிரச்னை. தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று நான் சொன்னதைப் பார்த்துத்தான், ராகுல் காந்தி அதே கருத்தை சொல்ல ஆரம்பிச்சிருக்கார். அந்த அளவுக்கு மிரட்டி வெச்சிருக்கோம்.

முரசொலி தலையங்கம்
என்னை பத்தியோ, எங்க கட்சி பத்தியோ எந்த ஊடகங்களும் செய்தி வெளியிடுவதில்லை. அப்படிதான் இவ்வளவு நாளா நாங்கள் நினைச்சிட்டு இருந்தோம். ஆனா முரசொலி நாளிதழில் தலையங்கமே வெளியிட்டு விட்டனர். அப்படின்னா... இனி நாங்கள்தான் தலையங்கம். ஆ.ராசாவுடன் விவாதத்துக்குத் தயாரா என்று கேட்கின்றனர். ஆனால் அயோத்திதாசர் பற்றி ராசாவுக்கு தெரியுமா என்று நான் கேட்கவில்லை. முதல்ல.. உங்கள் கட்சித் தலைவருக்கு அவரைப் பற்றி தெரியுமா? அவரை வரச் சொல்லுங்கள் விவாதத்துக்கு.

கராத்தேவா?
நான் வாய்ச் சொல் வீரர் சரி... அப்படின்னா ஸ்டாலின் வாள் சொல் வீரரா? நான் அதற்கும் தயார். வாள் சண்டையா, கம்புச் சண்டையா, கராத்தேயா... எதுவா இருந்தாலும் சரி. ஸ்டாலினா?, உதயநிதி ஸ்டாலினா? யார் வந்தாலும் சரி, உங்களை முழுவதுமாக ஒழிக்காமல் நான் போக மாட்டேன். எடப்பாடி பழனிசாமி ஒரு புள்ளை பூச்சி. அவரையே உங்களால் சமாளிக்க முடியவில்லையே" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications