"பிரதமர் ஆக ஆசைப்படுவதில் தவறில்லை.. ஆனால்..” - விஜய்யை சீண்டிய நயினார் நாகேந்திரன்!

Subscribe to Oneindia Tamil

கோவை: "தெரிந்தோ தெரியாமலோ 107 சீட் ஜெயிச்சிட்டு, பிரதமராக ஆசைப்படுவது தவறில்லை.. ஆனால் அதற்கான தகுதியும் திறமையும் இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "அரசியல் களத்திற்கு நேற்று வந்தவர்கள் எல்லாம் தங்களைப் பெரிய கட்சியாக நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள். கரப்பான் பூச்சி கட்சியாவது நேற்று வந்தவர்கள். ஆனால் காங்கிரஸ் அப்படி அல்ல, அதற்கு நீண்ட பாரம்பரியம் உண்டு.

Nainar Nagendran Winning 107 Seats Is Not Enough One Must Have the Competence to Become PM

ஒரு கட்சி எப்போது ஆட்சிக்கு வந்தது அல்லது யார் புதியதாக வருகிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் மக்களுக்கு எவ்வாறு ஆட்சி செய்கிறார்கள், என்ன நன்மைகளைச் செய்கிறார்கள் என்பதே முக்கியம். தமிழகத்தில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. பல இடங்களில் தங்கு தடையின்றி விற்கப்படுகிறது" என்றார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், சட்டம் ஒழுங்கு குறித்த விவரங்களை பெற முடியாது என தவெக அரசால் அரசாணை வெளியிட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது குறித்துப் பேசிய அவர், "தமிழக அமைச்சர்களால் எந்தவொரு தீர்க்கமான முடிவையும் சுயாதீனமாக எடுக்க முடிவதில்லை." என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது எப்போது தேவை, எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை முறையாக ஆராய வேண்டும். தற்போதைய நிதிச் சூழலில், இப்போது பயன்பாட்டில் உள்ள தலைமைச் செயலகமே போதுமானது." எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், "தமிழக முதல்வர் எதைப் பற்றிப் பேசினாலும், அந்த விவகாரத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு, முழுப் புரிதலோடு பேச வேண்டும். தமிழகம் தற்போது எத்தகைய மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை." எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் போஸ்டர் விளம்பரங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "தெரிந்தோ தெரியாமலோ 107 சீட் ஜெயித்துவிட்டு, பிரதமராக ஆசைப்படுவது தவறில்லை.. ஆனால் அதற்கான தகுதியும் திறமையும் இருக்கிறதா? என்றுதான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+