பெண்ணை வைத்து ஊடுருவிய பாகிஸ்தான்! உளவாளியாக மாறிய கடற்படை அதிகாரி! கோவையில் கைது
கோயம்புத்தூர்: பாகிஸ்தான் பெண்ணின் ஹனி டிராப் வலையில் சிக்கி, இந்திய கடற்படையின் ரகசிய தகவல்களை பகிர்ந்துக்கொண்டதாக கடற்படை அதிகாரி ஒருவர் கோயம்புத்தூரில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மாதக்கணக்கில் குடும்பத்தை, மனைவி, குழந்தைகளை பிரிந்து இருக்கும் ராணுவ வீரர்களை குறி வைத்து ஹனி ட்ராப் செய்யப்படுகிறது. அப்படித்தான் கோயம்புத்தூரில் கடற்படை வீரர் சிக்கியிருக்கிறார்.

கைது செய்யப்பட்டவரின் விவரம்
கைது செய்யப்பட்ட கடற்படை வீரரரின் பெயர் பிரதீப் முகர்ஜி, வயது 31. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 2014ம் ஆண்டு இந்தியக் கடற்படையில் மாலுமியாக இணைந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை தளத்தில் இவர் பணியாற்றி வந்தார்.
ஹனி டிராப்பில் சிக்கிய வீரர்
சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக ஒரு பெண் அக்கவுண்டில் இருந்து இவருக்கு நட்பு அழைப்பு வந்திருக்கிறது. வழக்கமாக ராணுவ அதிகாரிகளை குறிவைத்து வரும் நட்பு அழைப்புகள் பெரும்பாலும் பெண்களுடையதாகவே இருக்கும். அதிலும் தங்களை சாதாரண பெண்ணாக காட்டிக்கொள்ளாமல், ஃபேஷன் மாடல், கல்லூரி மாணவி, ராணுவப் பாதுகாப்புத் துறைக்கு உபகரணங்கள் சப்ளை செய்யும் நிறுவன ஊழியர், ராணுவ வீரர்கள் மீது அதிக மதிப்பு கொண்ட ஒரு சாதாரண பெண் இப்படியாக தங்களை காட்டிக்கொள்வார்கள்.
கவர்ச்சி பெண் என நம்பி ஏமாந்த கடற்படை வீரர்
பிதீப் முகர்ஜிக்கும் இப்படியான பெண் ஒருவர்தான் ரெக்வஸ்ட் கொடுத்திருக்கிறார். அந்த பெண் தன்னை ஒரு கவர்ச்சி பெண்ணாக காட்டிக்கொண்டார். இருவருக்கும் இடையில் பல மாதங்கள் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்திருக்கிறது. சாப்பிட்டிங்களா, டைமுக்கு சாப்பிடுங்க, குளிர்/வெயில் எப்படி இருக்கு? உடம்ப பாத்துக்கோங்க என்று கனிவாகவும் இனிமையாகவும் பேசியிருக்கிறார். பல மாதங்களாக குடும்பத்தை பிரிந்திருந்த பிரதீப்புக்கு இந்த பெண்ணின் பேச்சும், அக்கறையும் ஐஸ் கட்டி வைத்த மாதிரி இருந்திருக்கிறது. எனவே இஷ்டத்திற்கு உருகியிருக்கிறார்.
வெளியே வந்த உண்மை
ஒரு கட்டத்தில் அந்த பெண் இவரை தன்வசப்படுத்தி.. நெருக்கமாகவும் அந்தரங்கமாகவும் உரையாட வைத்திருக்கிறார். வீடியோ கால், போட்டோக்கள் இரு தரப்பிலிருந்தும் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதையெல்லாம் அந்த பெண் சேகரித்து வைத்துள்ளார். ஒரு கட்டத்தில், ராணுவ தகவல்கள் கேட்டு மிரட்டியிருக்கிறார். தகவலை தராவிட்டால் உன்னுடைய வீடியோவை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து விடுவேன் என்று பயமுருத்தியிருக்கிறார்.
ரகசியங்களை ஷேர் செய்த முகர்ஜி
இப்படியாக பிரதீப் முகர்ஜி தான் பணியாற்றிய விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படை தளத்தின் முக்கிய பாதுகாப்பு ரகசியங்கள், போர்க்கப்பல்களின் நடமாட்டங்கள் போன்ற அதி முக்கியமான, பகிரக்கூடாத தகவல்களை ஷேர் செய்திருக்கிறார். இந்த விஷயம் ஆந்திரப் பிரதேச காவல்துறையின் பிரத்யேக மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் கவனத்திற்கு வந்திருக்கிறது. எனவே உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், கடற்படை அதிகாரிகளின் முறையான அனுமதியை பெற்று கைது நடவடிக்கைக்குள் இறங்கினர்.
அதிரடி கைது நடவடிக்கை
பிரதீப் கோயம்புத்தூரில் உள்ள இந்திய கடற்படையின் முதன்மை தலைமைத்துவ பயிற்சி மையமான INS அக்ரானி வளாகத்திற்கு வந்திருந்தார். அங்கு வைத்து நேற்று ஆந்திரா போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட அவரை கோவை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாற்று வாரண்ட் பெற்று மேலதிக விசாரணைக்காக ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள மத்திய புலனாய்வு தலைமையகத்திற்கு அழைத்து சென்றனர்.


Click it and Unblock the Notifications
