100 கோடி சொத்து, 60 லட்சம் ரூபாய் கார்.. கோவை மை வி3 ஆட்ஸ் குறித்து பாமக பிரமுகர் புதிய தகவல்
கோவை: கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவனம் சொத்துக்களை எல்லாம் விற்று பணமாக மாற்றி பதுக்க முயற்சிப்பதாக பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி புதிதாக வீடியா ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மை வி 3 ஆட்ஸ் சொத்துக்கள் குறித்தும், அது எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்தும் கூறியுள்ளார்.
அந்த வீடியா குறித்து அசோக் ஸ்ரீநிதி வெளியிட்ட பதிவில், , MYV3ADS சொத்துக்களை விற்கிறார்கள் என்று எத்தனை முறை சொல்லி விட்டோம்... கார் வாங்கிய வெறும் 3மாதத்தில்ல் விற்க பார்கிறார்கள், 62 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய காரை இப்போது 45 லட்சத்திற்கு விற்க முயற்சிக்கிறார்கள், இது மக்களுடைய பணம், பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டிய பணம். இதன் மூலம் 60 பேருக்கு பணத்தை திரும்ப தரமுடியும் என்று கூறியுள்ளார்.

சக்தியானந்தன் என்பவர் கோவையில் My v3 Ads என்ற ஆப்பை நடத்தி வருவதுடன் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இந்த My v3 Ads யூடியூப் சேனலில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என சக்தியானந்தன் விளம்பரம் செய்திருந்தார். இவர்களின் விளம்பரத்தில், 360 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்றும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
மேலும் பணம் செலுத்தும் நபர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்பட்டது. மேலும் புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்பட்டுள்ளது. இதனை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலத்தவரும் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இந்நிலையில் இதில் பணம் வழங்கப்படவில்லை என்றும் மோசடி நடைபெறவதாவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு குறித்து 2 மாதம் முன்பு அறிக்கை வெளியிட்ட கோவை மாநகர காவல்துறை, MyV3Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்றப் பிரிவில், 2024 ஜனவரி மாதம் Prize Chits and Money Circulation Schemes (Banning) Act 1978, The Banning of unregulated deposit Schemes Act 2019 2 சட்டப்பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கின் தன்மை காரணமாக, தற்போது வழக்கானது பொருளாதர குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு அத்துறையின் விசாரணையின் கீழ் உள்ளது. மேலும், மேற்படி நிறுவனத்திற்கு ஹெர்பல் மற்றும் உணவப் பொருட்களை சப்ளை செய்த SIDVAA HERBAL AND FOODS என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்த S.V.விஜயராகவ் என்பவர் மீது போலியான முனைவர் படிப்புச்சான்றுடன் மேற்படி பொருள்களை தயாரிக்க உரிமம் பெற்றுள்ளதாக மோசடியில் ஈடுபட்டவர் மீது கோவை மாநகர குற்றப் பிரிவில் இவ்வாண்டு 2024 பிப்ரவரி மாதம் வழக்குத் தொடரப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
MyV3Ads என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அதற்கு ஹெர்பல் மற்றும் உணவு பொருட்களை அனுப்பிய நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சட்டப்படியான நடவடிக்கைகள் தவிர, MyV3Ads நிறுவனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மற்றும் அந்நிறுவனத்தின் சார்பாக தனிநபரை மிரட்டியதாக வந்த புகார் மீதும் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அந்நிறுவனத்தின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர்மீது கோவை மாநகரில் உள்ள சி2.பந்தயச் சாலை, இ1.சிங்காநல்லூர் மற்றும் இ2. பீளமேடு ஆகிய காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலே கூறப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் புலன்விசாரணையில் உள்ளன.
இச்சந்தர்ப்பத்தில், மேலே கூறப்பட்டுள்ள குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயரிலும் அல்லது அந்நிறுவனத்தின் கிளை நிறுவனம் என்ற பெயரிலும் தனிநபர்கள் முதலிடுகள் செய்வதாகவும், அத்தகைய முதலீட்டை வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரும் மேற்படி நிறுவனம் சட்ட விரோதமாக வசூலிப்பதாகவும் சமுக வளைத்தளங்களில் தகவல்களாக பரவுவதாக தெரிய நேரிடுகிறது.
பொதுமக்கள் அனைவரும் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள மேலே கூறியுள்ள நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்ற தகவல் வந்தால் அது சட்டவிரோதமானது மற்றும் மோசடியானது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற செய்திகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது" என்று கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சக்தியானந்தன் அண்மையில் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் கோவை மை வி 3 ஆட்ஸ் நிறுவனம் சொத்துக்களை எல்லாம் விற்று பணமாக மாற்றி பதுக்க முயற்சிப்பதாக பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி புதிதாக வீடியா ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், கோவை மை வி2 ஆட்ஸ் நிறுவனம் குறித்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. இந்த சூழலில் 2 மாதம் முன்பே குருஜி என்று சொல்லப்படுகிற விஜயராகவன் மதுரையில் 100 கோடிக்கு சொத்து வாங்கி உள்ளார். இதுபற்றி ஆவணங்களை நாங்கள் ரிலீஸ் செய்திருந்தோம்.. அந்த இடங்களுடைய பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை ரிலீஸ் செய்திருந்தோம்..
இப்போது இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு விசாரித்தது.
இதையடுத்து பெயில் ரத்து செய்யப்பட்டு சக்தியானந்தன் சரண்டர் ஆகி உள்ளார். இதை எல்லாம் தெரிந்து சொத்துக்களை விற்க முயற்சிக்கிறார்கள்.. இந்த பணத்தை பதுக்க வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். 3 மாதம் முன்பு பார்சுனர் கார் ஒன்று 65 லட்சத்துக்கு வாங்கியிருந்தார்கள்.. 10000 கிலோ மீட்டர் கூட ஓடாத அந்த காரை 45 லட்சத்திற்கு விற்க முயற்சிக்கிறார்கள்.. 15லட்சத்தை மை வி3 ஆட்ஸ் அக்கவுண்டில் கட்ட வேண்டும்.. மீதியை பணமாக கொடுக்க வேண்டும் என்கிறார்கள்..
இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். இந்த 60 லட்சம் காரை ஏன் விற்க முயற்சி செய்கிறார்கள் என்றால், இந்த வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இவங்களுடைய அக்கவுண்டை முடக்குவார்கள், சொத்துக்களை கண்டிப்பாக பறிமுதல் செய்வார்கள்.. எனவே பணமாக இருந்தால் பதுக்கிவிடலாம் என்பதற்காக பண்ணிக்கிட்டு இருக்காங்க.. ஆனால் சரியாக நடவடிக்கை எடுத்தால் 60 லட்சத்தை மீட்டெடுக்க முடியும்.. இதை மீட்டுத்தால் 60 பேருக்கு பணத்தை திரும்ப தர முடியும்" இவ்வாறு அசோக் ஸ்ரீநிதி கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications