கிரீன் சிக்னல் தந்த ஸ்டாலின்.. மகேந்திரனுக்கு வரப்போகும் முக்கிய "போஸ்ட்".. அப்போது அதான் பிளானா?

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: திமுகவில் இணைந்திருக்கும் டாக்டர் மகேந்திரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன.

Recommended Video

    Mahendran-ஐ தனியாக அழைத்த Stalin..கூடவே சென்ற Udhaynidhi | Oneindia Tamil | Oneindia Tamil

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் கடந்த 2 நாட்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். 80 நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வெளியேறிய பின் சில நாட்கள் அமைதியாக இருந்தவர் திமுகவில் இணைந்துள்ளார்.

    திமுகவில் மகேந்திரன் இணைய வாய்ப்பு உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்த நிலையில்,ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

    11 ஆயிரம் பேர்

    11 ஆயிரம் பேர்

    கிட்டத்தட்ட 11 ஆயிரம் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களும் திமுகவில் இணைந்து உள்ளனர். இதற்கான பட்டியலை முதல்வர் ஸ்டாலினிடம் மகேந்திரன் கொடுத்துள்ளார். கொங்கு மாவட்டங்களை சேர்ந்த மநீம நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்துள்ளனர். இந்த நிலையில்தான் மகேந்திரனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்கான ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.

    எப்படி

    எப்படி

    மகேந்திரனுக்கு 2 பொறுப்புகளை கொடுப்பதற்கான ஆலோசனை நடந்து வருகிறது. இந்த ஆலோசனை முடிந்த பின் இரண்டில் ஒரு பொறுப்பு இறுதி செய்யப்படும் என்கிறார்கள். அதன்படி முதலாவதாக கோவை, ஈரோடு உள்ளிட்ட ஏதாவது ஒரு கொங்கு மண்டல மாவட்டத்தின் முழு பொறுப்பும் மகேந்திரனின் வசம் செல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    மகேந்திரன்

    மகேந்திரன்

    கொங்கு மண்டலத்தில் மகேந்திரன் பிரபலமானவர். அதிமுக, மநீம, பாஜக நிர்வாகிகள் பலர் இவருக்கு நெருக்கம். மாற்று கட்சி நிர்வாகிகளை இவர் எளிதாக திமுக பக்கம் இழுக்க முடியும். இதன் காரணமாக இவருக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட ஏதாவது ஒரு பொறுப்பு கொங்கு மண்டலத்தில் கொடுக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

    இன்னொரு பொறுப்பு

    இன்னொரு பொறுப்பு

    இன்னொரு பக்கம் இவருக்கு திமுக ஐடி விங் மாநில செயலாளர் பொறுப்பு வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பணியை தற்போது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிர்வகித்து வருகிறார். ஏற்கனவே எம்எல்ஏ, நிதி அமைச்சர் என்று பல்வேறு பொறுப்புகளை பிடிஆர் கவனித்து வருகிறார். கட்சியின் முக்கிய முகமாக பிடிஆர் இருக்கிறார்.

    பிடிஆர்

    பிடிஆர்

    அதேபோல் பட்ஜெட் பணிகள் தொடங்கி, பொருளாதாரத்தை சரி செய்வது வரை பல பொறுப்புகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அவரின் பணி சுமையை குறைக்கும் வகையில் திமுக ஐடி விங் மாநில செயலாளர் பொறுப்பு மகேந்திரனுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. திமுக ஐடி விங் தற்போது டேட்டாக்களை கையாளும் துறையாக மட்டுமே உள்ளது.

    இணையம்

    இணையம்

    இணையத்தில் திமுக ஐடி விங் பெரிதாக பணிகளை செய்வது இல்லை. இதை திமுக விரிவுபடுத்தும் திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை ஐடி விங் விரிவுபடுத்தப்படும் பட்சத்தில் மகேந்திரனுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறுகிறார்கள். மாவட்ட செயலாளர்கள் அல்லது ஐடி விங் செயலாளர் என்ற இரண்டு பொறுப்பில் ஒன்று பிடிஆருக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+