கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் 12ஆவது நபர் கைது.. சிக்கியவர் முபினின் நண்பர்!
கோவை: கோவையில் கார் சிலிண்டர் குண்டுவெடிப்பில் 12 ஆவது நபரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலில் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து உயிரிழப்புகளை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஆனால் போலீஸார் வாகன தணிக்கையால் என்ன செய்வது என தெரியாமல் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து முபின் உயிரிழந்தார் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் கோவை போலீஸார் விசாரணை நடத்தியதில் கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக் உள்ளிட்ட 11 பேர் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 11 பேரையும் தேசிய புலனாய்வு துறை அமைப்பினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கோவை உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த முகமது இட்ரீஸ் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று மாலை கைது செய்தனர்.
சிலிண்டர் வெடிப்பில் 12 ஆவது நபராக கைதான இட்ரீஸை சென்னை அழைத்து வந்தனர். இவர் முபினின் நண்பர். சிலிண்டர் வெடிப்பதற்கு முன்பு நிறைய குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவரை என்ஐஏ அதிகாரிகள் கண்காணித்து வந்ததும் தெரியவந்தது. அது போல் 3 ஆண்டுகளாக முகமது இட்ரீஸின் செல்போனையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
இந்த நிலையில் கோவையில் இட்ரீஸிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications