நீலகிரியில் 140 கிமீ.. 3 மணி நேரத்தில் கோவை.. சிறுவனை காப்பாற்ற மின்னலாய் வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
கோவை: நீலகிரி மாவட்டம் கூடலூரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கண்ணில் குச்சி குத்தி நின்றது. அந்த சிறுவனை காப்பாற்ற வேண்டும் என்றால், கூடலூரில் இருந்து கோவைக்கு 4 மணி நேரத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். உண்மையில் நீலகிரியின் கூடலூரில் இருந்து கோவைக்கு செல்ல ஐந்து மணி நேரம் ஆகும். ஆனால் மூன்றே மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார் ஓட்டுநர் ஏசுதாஸ். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டம் கூடலூர் என்பது கோவையில் இருந்து 140 கிமீ தூரத்திலும், ஊட்டியில் இருந்து 49 கிமீ தூரத்திலும் உள்ளது. அந்த பக்கம் மைசூரு 108 கிமீ தூரத்தில் உள்ளது. மைசூர் பாதையை பொறுத்தவரை அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைப்பாதையாகும். ஊட்டி வழியாக கோவை என்றாலும் மேட்டுப்பாளையம் வரை மலைப்பகுதியாகும்.

கூடலூரில் இருந்து கோவைக்கு செல்ல வேண்டும் என்றால் அடர்ந்த வனப்பகுதி மற்றும் சுற்றுலா வாகனங்கள் நிறைந்த மலைச்சாலையில் ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஆகும். இதுதான் அங்குள்ள நிலைமை. ஆனால் ஓட்டுநர் ஏசுதாஸ், வெறும் 3 மணி நேரத்தில் கோவைக்கு ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்று சிறுவனை காப்பாற்றி உள்ளார். ஏசுதாஸின் அசாத்தியமான செயல் பற்றி பார்ப்போம்.
சிறுவன் கீழே விழுந்தார்
நீலகிரி மாவட்டம் கூலூரில் கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வரும் பிரதீப் என்கிற குட்டன் வசித்து வருகிறார். பிரதீப்பின் மகன் நவநீதன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறை காரணமாக குழந்தைகள் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நவநீதன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக நவநீதன் கீழே விழுந்துள்ளார்.
கண்ணில் குத்தியது
அப்போது தரையில் இருந்த மரக்கட்டை நவநீதன் கண்களில் குத்தி அப்படியே சொருகி நின்று கொண்டது. இதனால் சிறுவன் வலியால் அலறி துடித்திருக்கிறான். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. நவநீதன் மேல் சிகிச்சைக்காக உடனடியாக கோவை கொண்டு செல்லப்பட வேண்டும் என அங்கிருந்த மருத்துவர்கள் கூறினார்கள். சிறுவனின் தந்தை பிரதீப் அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸின் உதவியை நாடினார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ் சற்றும் தாமதிக்காமல் காயமடைந்த நவநீதனை ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் கோவைக்கு புறப்பட்டார். அவர் செல்லும் வழியில் அந்தந்த ஊர்களில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உதவியுடன், வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மலைப் பாதையில் மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டி கோவையைச் சென்றடைந்தார்.
3 மணி நேரத்தில் சென்றார்
ஐந்து மணி நேரத்தில் போக வேண்டி கோவைக்கு வெறும் 3 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏசுதாஸ் சென்றார். கோவை தனியார் மருத்துவமனையை சென்றடைந்த நிலையில, சிறுவன் நவநீதனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை நல்ல முறையில் நடைபெற்ற நிலையில், ஓரிரு நாளில் சிறுவனுக்கு இயல்பான பார்வை கிடைக்கும் எனவும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications