இதுக்கு எடப்பாடி பழனிசாமி திமுகவில் சேர்ந்துடலாம்.. அதிமுகவை காப்பாத்துங்க.. நிர்மல்குமார் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் நிலவரத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அரசியல் கட்சி கூட்டணிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக இருவரும் தவெகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். திமுக அதிமுக மறைமுக கூட்டணியில் இருப்பதாக தவெக விமர்சித்து வருகிறது. திமுகவுக்கு முட்டு கொடுப்பதற்கு பதிலாக, நேரடியாக அந்த கட்சியில் இணைந்துவிடலாமே என எடப்பாடி பழனிசாமியை நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.

கோவையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமிக்கு அவர் சொந்த கட்சியில் பிரச்சனை இருக்கிறது. இது எடப்பாடி அதிமுகவா, யாரின் அதிமுகவா என்று கேட்டோம். அவர் திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்தார் என அதிமுக மூத்த நிர்வாகிகளே கூறினர். எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைக்கு எதிராக எடப்பாடி செயல்படுகிறார். எம்ஜிஆர் கட்டிய அதிமுக அலுவலகத்திற்குள் செல்வதற்கு எடப்பாடிக்கு தகுதியில்லை.

Edappadi Palanisamy Nirmalkumar

கட்சி சொத்துகளில் நிற்பதற்கும் அவருக்கு அருகதையில்லை. எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி டிராமா செய்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா மீது மரியாதை இருந்திருந்தால் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பாரா. அதற்கு பதில் சொல்லாமல் அவர் வேறு எதையோ பேசிக் கொண்டிருக்கிறார். இப்போது இந்த அரசு மக்களுக்காக முழுவீச்சில் செயல்படுகிறது. யார் யாரெல்லாம் தவறு செய்தார்களோ, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம்.

திமுகவில் இணைந்துவிடலாம்

இதுவரைக்கும் இந்த 6 மாதங்களில் திமுகவினர், ஊழல் வழக்கில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக பயங்கரமான ஊழல்வாதிகள். குழந்தைகளின் பாதுகாப்பில் கூட சமரசம் செய்து பணம் பார்த்தவர்கள் திமுக. கும்பகோணம் பள்ளி தீ விபத்தின்போது, பாதுகாப்புக்கு சான்றிதழ் வாங்க வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் திட்டம் கொண்டு வரப்பட்டது. குழந்தைகளுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என அதில் அன்பில் மகேஷ் பணம் பார்த்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து, நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு எடப்பாடி பாராட்டு தெரிவித்திருக்க வேண்டும். அதைவிட்டு திமுகவுக்கு ஆதரவாக எடப்பாடி பேசி வருகிறார். இதற்கு எடப்பாடி நேரடியாக திமுகவில் இணைந்துவிடலாம். அதைத்தான் கட்சிக்காரர்கள் கூறி வருகிறார்கள். திமுகவில் இணைந்துவிட்டு, அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைப்படி இயங்கட்டும். முதலமைச்சர் எல்லாத்துறையிலும் ஆய்வு செய்து வருகிறார்.

அன்பிலுக்கு எடப்பாடி ஆதரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என கேவலமான பதிலை சொன்னவர் எடப்பாடி. முதலமைச்சராக இருந்தபோது எந்த வேலையும் செய்யவில்லை. கூவத்தூரில் கும்மாளம் போட்டு டெண்டர் முறையில் முதலமைச்சரானவர். வெல்லமண்டி வியாபாரம் போலத்தான் முதலமைச்சராக இருந்தபோதும் செய்தார். அதே வியாபாரத்தை பயன்படுத்தி திமுகவுடன் ஆட்சியமைக்க முயற்சி செய்தார்.

தவறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம். தேனி சிறையில் கைதிகள் தப்பியதற்காக 19 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 13 கைதிகளை பிடித்துவிட்டோம். அதிகாரிகள் ஆய்வு பணியில் உள்ளனர். யாரும் தப்பிக்க முடியாது. திமுக ஆட்சியில் சிறையில் கூட ஊழல் செய்தனர். அன்பில் மகேஷ்க்கு ஆதரவாக எடப்பாடி அறிக்கை விட்டாலும் ஆச்சர்யமில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு ஒரு சதவீதமாக விசுவாசமாக இருக்க வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+