கோவை கோவிலில் ‛பசு தானம்’.. ஓ பன்னீர் செல்வம் செய்ததை கவனிச்சீங்களா.. ஓபிஎஸ்ஸின் கணக்கு தான் என்ன?
கோவை: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை பூண்டி ஆண்டவர் கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கன்றுடன் பசுவை தானம் செய்து வழிபாடு செய்தார். இந்நிலையில் தான் அவரது பசு தானத்தின் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் அணி பாஜக கூட்டணியில் இடம்பெற்றது.

பாஜக கூட்டணி சார்பில் ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். தற்போது அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார்.
இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை பூண்டி ஆண்டவர் கோவிலுக்கு சென்றார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் சென்றனர். அந்த சமயத்தில் ஓ பன்னீர் செல்வம் கோவிலுக்கு பசு தானம் செய்தார். கன்றுடன் கூடிய பசுவை அவர் கோவிலுக்கு முறைப்படி தானம் செய்தார். பொதுவாக பசு தானம் செய்யும்போது அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும். அப்படி அலங்கரிக்கப்பட்ட பசுமாட்டையும், கன்றையும் ஓ பன்னீர் செல்வம் கோவிலுக்கு தானமாக வழங்கினார்.
இந்நிலையில் தான் அவரது பசு தானத்தின் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக பசு தானம் என்பது பல ஆண்டு காலமாக தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இது கோ தானம் அல்லது பசு தானம் என அழைக்கப்பட்டு வருகிறது. பசு தானம் என்பது நன்றாக பால் கறக்கும் பசுவை கன்றுடன் சேர்த்து கோவிலுக்கு வழங்குவதாகும்.
இப்படி பசு தானம் செய்தால் சில முக்கிய விஷயங்கள் நடக்கும் என்று நம்பப்படுகிறது. அதாவது பசு தானம் செய்வதன் மூலம் ஒருவர் தனது வாழ்நாளில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களில் இருந்தும், பாவம் செய்த முன்னோர்களையும் விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் பசு தானம் செய்வதன் மூலம் துன்பங்கள் விலகி ஓடும் என்ற நம்பப்படுகிறது.
அதேபோல் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய வேண்டும் என்றாலும் சங்கல்பம் செய்து பசு தானம் செய்யும் வழக்கம் உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஓ பன்னீர் செல்வம் பசு தானம் செய்துள்ளார். இருப்பினும் கூட ஓ பன்னீர் செல்வம் பசு தானம் செய்ததன் நோக்கம் பற்றி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் கூட தற்போது அரசியலில் ஓ பன்னீர் செல்வத்துக்கு அடிமேல் அடி விழுகிறது. இதனால் அதில் இருந்து விடுபட வேண்டும் என்பதை நினைத்து அவர் கன்றுடன் பசு தானம் செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications