கோவையை அதிரவைத்த சம்பவம்.. துக்க வீட்டில் பறிபோன மூன்று உயிர்கள்.. நடந்தது என்ன?
கோவை: கோவை அருகே உள்ள கணபதியில் துக்க வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கணபதி பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி ராமலட்சுமி (85). இவர் கடந்த வியாழக்கிழமை இரவில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, உறவினர்கள் ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருந்துள்ளனர்.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலையும் துக்க நிகழ்விற்காக அவரது வீட்டிற்கு ஏராளமானோர் வருகை புரிய தொடங்கினர். இந்த நிலையில் அன்றைய தினம் காலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், அந்த ப்ஃரீசர் பாக்ஸுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுக்கப்பட்டது. அப்போது ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றப்பட்டது.
அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக வீட்டினுள் புகை சூழ்ந்ததால் உடனடியாக வீட்டிற்குள் இருந்த பலரும் வெளியேறினர். அப்போது, அந்த அறையில் இருந்த பத்மாவதி, பானுமதி ராஜேஸ்வரன், ஸ்ரீராம் ஆகிய நான்கு பேர் மாட்டிக் கொண்டனர். அவர்களை மீட்டபோது பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து, உடனடியாக நால்வரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, மருத்துவமனைக்குச் செல்லும்போது வழியிலேயே பத்மாவதி என்பவர் உயிரிழந்தார். பத்மாவதி மூதாட்டி ராமலட்சுமிக்கு மருமகள் ஆவார்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பானுமதி (55) மற்றும் ராஜேஸ்வரன் (53) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துக்க வீட்டுக்குச் சென்ற நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications