கோவை சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை.. 6 நாட்களுக்கு பிறகு இளைஞர் ஒருவர் கைது
Recommended Video

கோவை: கோவை துடியலூரில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் 6 நாட்களுக்கு பிறகு இளைஞர் சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியில் குடியிருந்து வருபவர் பிரதீப் மற்றும் வனிதா. துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களது 7 வயது பெண் குழந்தை அருகில் உள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

குழந்தை காணவில்லை
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தது. மாலை 6 மணியளவில் குழந்தை காணாததைக் கண்டு பெற்றோர் அக்கம் பக்கம் தேடியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ்
இந்நிலையில் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் காணாமல் போன குழந்தையின் வீட்டருகே உள்ள சிறிய சந்தில் முகத்தில் டிசர்ட் சுற்றப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை
இதையடுத்து அது காணாமல் போன பிரதீப்பின் குழந்தை என்பது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கை தற்போது வெளியானது.

கழுத்து நெரித்து கொலை
அதில் கோவை சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்டு, நரம்புகள் துண்டானதால் இறந்தார். சிறுமியின் கழுத்தில் கயிறு போன்ற ஒரு பொருளை வைத்து இறுக்கி கொலை செய்ததாகவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இளைஞர் கைது
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் போலீஸார் கொலையாளி குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என துண்டுபிரசுரங்கள் வெளியிட்டும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் 6 நாட்கள் கழித்து சந்தோஷ்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications