கோவை மெட்ரோவிற்கு மட்டுமே வாய்ப்பு.. மதுரைக்கு வாய்ப்பு குறைவு.. மத்திய அரசு சொல்ல வருவது இதுதான்
கோவை: மத்திய அரசு சொல்வது படி பார்த்தால், கோவை மெட்ரோவிற்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.. ஆனால் மதுரை மெட்ரோவிற்கு தற்போதைக்கு வாய்ப்பே இல்லை என்றே தெரிகிறது. எனினும் கோவைக்கே அரசு பல கட்ட புள்ளிவிவரங்களை மீண்டும் வழங்க வேண்டியதிருக்கும். அதில் திருப்தி ஏற்பட்டால் தான் மத்திய அரசு கோவை மெட்ரோவிற்கு அனுமதி வழங்கும். அமைச்சர் மனோகர் லால் மற்றும் மத்திய அரசின் பதில்களின்படி பார்த்தால், மாநில அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கையில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டியது கட்டாயம் ஆகும். அது என்னென்ன சிக்கல்கள் என்பதை பார்ப்போம்.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கோயம்புத்தூருக்கு மெட்ரோ வரவேண்டும் என்பது மத்திய அரசுக்குத் தெரியாத விஷயம் கிடையாது.. ஆனால், அவர்கள் திட்டத்தை மொத்தமாக 'வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், 'நீங்கள் கொடுத்த ரிப்போர்டில் (DPR- விரிவான திட்ட அறிக்கை) சில இடத்துல கணக்குகள் சரியா வரவில்லை என்று தான் கூறுகிறார்கள்..

முழுமையாக ஒதுக்கவில்லை... மத்திய அரசு உண்மையிலேயே வேண்டாம் என்று நினைச்சிருந்தா, அப்படியே தூக்கிப் போட்டுருக்கும் என்றும், ஆனால், அவர்கள் இன்னும் ரிப்போர்ட்டை வைத்து ஆய்வுகள் நடத்தி பேசி வருகிறார்கள். கோவையில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. எனவே மெட்ரோ வர வாய்ப்பு இருக்கும் என்று தான் மத்திய அரசு அதிகாரிகள் நினைக்கிறார்களாம்.
சரி செய்யக்கூடிய தவறுகள்
மத்திய அரசு சுட்டிக் காட்டுற தவறுகள் ரொம்பவும் அடிப்படையானது. 'சென்னைக்கு இருக்குறதை விட உங்களுக்கு அதிகப் பயணிகள் வருவாங்கன்னு சொல்றது நம்ப முடியலையே' என்று கேட்கிறது. அடுத்தாக கோவையில் அமைக்க திட்டமிட்ட மெட்ரோவில் 'ஏழு ரயில் நிலையத்துக்குப் போதிய இடம் (நிலம்) இல்லையே' என்று சொல்கிறது சொல்றாங்க. இந்த மாதிரி கணக்குகளையும், நிலப் பிரச்சனையையும் மாநில அரசு சரி செய்தால் தான் மெட்ரோ சாத்தியம் மத்திய அரசு வட்டாரங்கள் சொல்கின்றன.
இப்போதைக்கு ஏன் தடை?
ஒரு ஊரில் மெட்ரோ ரயில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கான கோடி செலவு பண்ண வேண்டும். அதனால், திட்டம் போட்டபடி சரியாக பயன்பாட்டுக்கு வராம போச்சுன்னா, பணம் வீணாயிடும் என்று மத்திய அரசு பயப்படுகிது. அதனாலதான், தமிழக அரசு கொடுத்த பயணிகள் கணக்குகள் ரொம்ப அதிகமா இருக்கிறது, அதை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை செக் பண்ணுங்க என்று மத்திய அரசு கூறியிருக்கிறதாம்.
விளக்கம் தேவை
நிலம் கிடைக்காத கோவை மெட்ரோ ரயில் ஸ்டேஷனுக்கு எல்லாம் 'நிலம் ரெடியா இருக்கு' என்று உறுதி கொடுத்தால், மத்திய அரசு அடுத்த கட்டத்திற்கு போவதற்கு வாய்ப்பு உள்ளதாம். சுருக்காக சொல்வது என்றால், இந்த மூன்று பாயிண்டிற்கு விளக்கம் கிடைத்தால் கோவைக்கு மெட்ரோ உறுதி என்கிறார்கள். அதன்படி, சென்னையை விடக் குறைந்த வழித்தடத்திற்கு அதிகப் பயணிகள் வருவார்கள் என்ற கணிப்பைத் துல்லியமான மற்றும் நம்பகமான தரவுகளுடன் நியாயப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இரண்டாவதாக சாலைப் போக்குவரத்திலிருந்து அதிகப்படியான மக்கள் மெட்ரோவுக்கு மாறுவார்கள் என்பதற்கான வலுவான சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு எதிர்பார்க்கிறது. மூன்றாவதாக கோவை மெட்ரோவில் 7 நிலையங்களுக்குப் போதுமான நிலம் இல்லை என்ற குறையை நீக்கி, நிலம் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு விரும்புகிறது.
மதுரை மெட்ரோ நிலை என்ன
மதுரை மெட்ரோவுக்கு இப்போதைக்கு வாய்ப்பு கொஞ்சம் கம்மி என்றே மத்திய அரசு சொல்ல வருகிறது. ஆனால், 'கண்டிப்பா வராது'னு சொல்லவில்லை. அவங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க. மதுரைக்காக மாநில அரசே தயார் செய்த ஒரு ஆய்வு ரிப்போர்ட்டில் 'இப்போதைக்கு மதுரைல இருக்கிற ஆட்கள் போக்குவரத்துக்கு மெட்ரோ அவசியம் இல்லை, அதுக்கு பதிலாக பஸ் போக்குவரத்துக்கு தனிப் பாதை (BRTS) போட்டாலே போதும் என்று மாநில அரசே கூறியிருக்கிறதாம். Comprehensive Mobility Plan of Madurai (CMP) என்ற ஆய்வு அறிக்கையில் இந்த கருத்து இடம் பெற்றுள்ளதாம். இதனை மத்திய அமைச்சர் மனோகர் லால் கூறி விளக்கமும் அளித்திருக்கிறார்
விரிவான ஆய்வு அறிக்கை தேவை
எனினும் மதுரைக்கு மெட்ரோ ரயில் வர வேண்டும் என்றால், ஆனா அடுத்த 15 வருஷத்தில் மதுரை ரொம்பப் பெருசாகிடும், போக்குவரத்து நெரிசல் நிச்சயம் தாங்க முடியாது. அப்போ இந்தப் பஸ் பாதைகள் பெருசாக வேலை செய்யாது. அதனால, எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு இப்போதே மெட்ரோவை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு விரிவான, சரியான, வலுவான ஆய்வு தகவல்கள் மற்றும் மெட்ரோ மதுரைக்கு அவசியம் தான் என்பதை நியாயப்படுத்தும் உறுதியான தரவுகளுடன் அறிக்கையை மாநில அரசு மீண்டும் அறிக்கை அனுப்ப வேண்டும். அந்த அறிக்கையை பார்த்து மத்திய அரசு திருப்தி அடைந்தால் மட்டுமே மதுரைக்கு மெட்ரோ சாத்தியம் ஆகும். எனவே இப்போதைக்கு மதுரை மெட்ரோவிற்கு வாய்ப்பு மிக குறைவு தான்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications