ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்
கோவை: உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை அடுத்த இரு நாட்களுக்கு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்கி உள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மலைப் பிரதேசங்களை நோக்கிப் படையெடுத்து உள்ளனர்.
இதன் காரணமாக ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது.

கோடைக் காலம்
குறிப்பாகக் கோடை சீசன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மக்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஊட்டி மலைப்பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது உதகை குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் S.P. அம்ரித் அறிவித்துள்ளார்.

போக்குவரத்து மாற்றம்
நேற்று (ஏப்ரல் 16) இந்த போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்த நிலையில், நாளை (ஏப்ரல் 18) வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் உதகை ஆட்சித் தலைவர் S.P. அம்ரித், "மலைப்பாதையில் வாகன நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கவும் பாதுகாப்பு கருதியும் உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்கள் கோத்தகிரி வழியாகச் செல்ல அறிவுறுத்தி உள்ளோம்.

பிளாஸ்டிக்
அதேபோல மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரும் அனைத்து வாகனங்கள் குன்னூர் வழியாக அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மட்டுமே இப்பாதைகளில் அனுமதிக்கப்படும். அதேநேரம் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் தடையின்றி வரலாம். உயர் நீதிமன்ற உத்தரவின்படி நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைகள் சீல் வைக்கப்பட உள்ளது.

சாலை போக்குவரத்து
கல்லார் குஞ்சப்பண்ணை, நாடுகாணி, கக்கனல்லா உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். அந்த வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக வரும் அனைத்து சுற்றுலா வாகனங்கள் தலைகுந்தாவிலிருந்து குளிச்சோலை, புதுமந்து வழியாக உதகைக்கு அனுமதிக்கப்பட உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications