கோவையில் வேலை செய்றீங்களா?.. வெளிமாநில தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நோட் பண்ணிக்கோங்க
கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணியாற்றி வரும் நிலையில், வெளி மாநில தொழிலாளர்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், முடிதிருத்தும் நிறுவனங்கள் விவசாய பொருட்கள் சுத்தம் செய்யும் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் உட்பட இதர நிறுவனங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் (கேரள மாநிலத்தவர்கள் உட்பட அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களின் அடையாள அட்டை இதர ஆவணங்கள் பெறாமல் பல இடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர். வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் அவர்களது அடையாள அட்டை தொடர்பான ஆவணங்களை பெற்று பணியமர்த்த வேண்டும். அவர்களுக்கு பணியிடங்களில் போதிய பணி பாதுகாப்பு குடியிருப்பு மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்பட வேண்டும்.
மேலும், அவர்களது விவரங்களை தொழிலாளர் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள labour.tn.gov.in/ism என்ற சிறப்பு வலைதள முகவரியில் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்படவேண்டும். அவ்வாறு விவரங்கள் முறையாக பதிவு செய்யப்படாத சூழலில் உயிரிழப்பு சம்பவங்களில் தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கப்படும் சேவைகளை அவர்கள் பெறுவதிலும், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பின்னர் அவர்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடும்போது அவர்கள் குறித்த விவரங்கள் அறிவதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
எனவே, நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு சான்று எண் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து வெளி மாநில தொழிலாளர் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு தொழிலாளர்களின் ஆதார் கார்டு மற்றும் வங்கி பாஸ் புக் மூலம் labour.tn.gov.in/ism என்ற முகவரியில் Employer registrationஐ கிளிக் செய்து அதில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தின் பதிவு எண்ணை உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்தவுடன் அதன் விவரங்களான Aadhar No, Aadhar phone no linked, Aadhar linked Bank account Details, Employer details, ISM workers Native address, Education details of ISM workers போன்றவற்றை excel format இல் பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. பதிவு செய்யாத நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பாக வரும் நவம்பர் 29 முதல் டிசம்பர் மாதம் வரை கோவை மாவட்டத்தில் வெள்ளக்கிணறு, சலிவன் வீதி, பாப்பம்பட்டி, பெரியகடைவீதி, ஆர்.எஸ் புரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஆனைமலை மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் அந்தந்த பகுதி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் மூலம் முகாம்கள் நடத்துவது குறித்து இன்று தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
பதிவு செய்வது தொடர்பாக ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண் 0422-2241136 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தொழிலாளர் உதவி ஆணையர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications