காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும் ஓயாத சர்ச்சை! பேரூரில் போலீஸ் பாண்டியராஜனுக்கு அடுத்த சிக்கல்
கோவை: சென்னை துணை ஆணையராக பணியாற்றிய பாண்டியராஜனையும், சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டது, சாமளாபுரம் பகுதியில் பெண்ணின் கன்னத்தில் அறைந்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கினார். சமீபத்தில் சென்னை திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை வழக்கில், கொளத்தூர் துணை ஆணையராக இருந்த பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் பாண்டியராஜன் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். நடை சாத்தப்பட்ட நிலையில், பாண்டியராஜனுக்காக ஆகம விதிகளை மீறி, சிறப்பு தரிசனத்துக்கு அனுமதித்ததாக புகார் எழுந்துள்ளது. அங்கிருந்த பக்தர் ஒருவர், 'விதிகளை மீறி எப்படி உள்ளே செல்லலாம்.' என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் பாண்டியராஜன். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு காவல்துறையில் டி.எஸ்.பியாக பணியில் இணைந்தார். கால் வைத்த இடமெல்லாம் கண்ணி வெடி என்பது போல, ஆரம்பம் முதலே பாண்டியராஜன் சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. அவர் பழநியில் பணியாற்றிய போது கனிமவளக் கடத்தல் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்தது.
தேனி, திருப்பூர், கோவை, சென்னை என்று அவர் அடுத்தடுத்து பணியாற்றிய மாவட்டங்களிலும் சர்ச்சையில் சிக்கினார். கடந்த 2017 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஏ.டி.எஸ்.பியாக பணியாற்றிய பாண்டியராஜன் பெண்ணின் கன்னத்தில் அறைந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது கோவை மாவட்ட எஸ்.பியாக பணியாற்றிய பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக அவர் சென்னையில் பணியாற்றி வந்தார். கடைசியாக அவர் சென்னை, கொளத்தூர் பகுதி காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்தார். சென்னை திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை வழக்கில், பாண்டியராஜன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதன் காரணமாக பாண்டியராஜன் மீண்டும் சர்ச்சையில் சிக்கி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் பாண்டியராஜன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். இரவு அனைத்து பூஜைகளும் முடிந்த நிலையில், ஆகம விதிகளை மீறி கோயில் உதவி ஆணையர் விமலா பாண்டியராஜனுக்கு விஐபி தரிசனம் செய்ய அனுமதித்ததாக புகார் எழுந்துள்ளது. இதை அங்கிருந்த பக்தர்கள் வீடியோவாக எடுத்து பாண்டியராஜன் மற்றும் கோயில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பக்தர்களுக்கு ஒரு சட்டம். விஐபிகளுக்கு ஒரு சட்டமா. முதலமைச்சராக இருந்தாலும் ஆகம விதிகளை மீறக் கூடாது. கோயில் நடை சாத்திய பிறகு அவரை உள்ளே அழைத்து செல்ல யார் அனுமதி கொடுத்தனர். இது நியாயமா. கோயில் நேரம் தெரிந்து கொண்டு சற்று முன்பாக வருவதில் என்ன சிக்கல் என்று வீடியோ எடுத்த பக்தர் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பாண்டியராஜன், ஊழியர்கள் முறையான பதில் சொல்லவில்லை.
"கோயிலில் இரவு பள்ளியறை நிகழ்ச்சி முடிந்தவுடன் கதவுகளை திறந்து வழிபடக்கூடாது. இறைவன் இருக்கக்கூடிய கதவுகளை திறக்கவும் கூடாது. இது ஆகம விதிகளில் முக்கியமான ஒரு விதி. ஆனால் அதை ஒரு தனிப்பட்ட நபருக்காக, கோயிலின் உதவி ஆணையர் பள்ளியறை நிகழ்ச்சி முடிந்த பின்பும் ஆகம விதிகளுக்கு எதிராக கோயிலுடைய கருவறை கதவுகளை திறந்து அவருக்கு தரிசனம் செய்யக்கூடிய நிகழ்வை நடத்தியுள்ளார். அவர் மீதும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக, இந்து இயக்கங்கள், சிவனடியார்கள் புகார் எழுப்பி, கோயில் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications