கோவையில் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி! தினமும் இசைக்கச்சேரி-பட்டிமன்றம்! செந்தில்பாலாஜி அசத்தல்!
கோவை: எங்கள் பெருமை எங்கள் முதல்வர் என்ற தலைப்பில் ஸ்டாலினின் அரிய புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சியை கோவையில் நடத்தி வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
நடிகர்கள் சத்யராஜ், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரை இக்கண்காட்சிக்கு அழைத்து வந்து தலைமையின் கவனம் ஈர்த்துள்ளார் செந்தில்பாலாஜி.

முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் சிறப்பு புகைப்பட கண்காட்சி ஒன்றை நடத்தியிருந்தார் அமைச்சர் சேகர்பாபு. இந்த கண்காட்சியில் இதுவரை யாரும் பார்த்திராத ஸ்டாலினின் பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இதனை சினிமா, அரசியல், பிரபலங்கள் பலரும் அமைச்சர் சேகர்பாபு அழைப்பின் பேரில் நேரடியாக வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்.

அந்த வகையில் இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இன்றைய தலைமுறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் வளர்ச்சியை பற்றி முழுமையாக தெரியாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த புகைப்பட கண்காட்சி அவர் பட்ட துயரங்களை இளம் தலைமுறைகளுக்கு விளக்கும் எனவும் கூறியிருந்தார்.
அதோடு மட்டுமின்றி தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் ஈஸ்வரன்
சென்னைக்கு அடுத்த படியாக மதுரையில் முதல் ஆளாக ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை அமைத்த அமைச்சர் மூர்த்தி, நடிகர்கள் சூரி, வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களை அழைத்துச் சென்று கவனம் ஈர்த்தார்.

சென்னை, மதுரையை தொடர்ந்து தற்போது கோவையில் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. அடுத்ததாக இக்கண்காட்சி திருச்சியில் நடத்தப்படவுள்ளது.
அதில் திருச்சியை பூர்விகமாக கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், உள்ளிட்ட திரை பிரபலங்களை பங்கேற்க வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications