கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை மருதமலை அடிவாரத்தில் யானை சாணத்தில் நாப்கின், மாஸ்க்!.. எத்தனை ஆபத்தில் வனவிலங்குகள்?

Google Oneindia Tamil News

கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில் யானையின் சாணத்தில் பிளாஸ்டிக் கவர்கள், முகக் கவசம், நாப்கின் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    கோவை மருதமலை அடிவாரத்தில் யானை சாணத்தில் நாப்கின், மாஸ்க்!.. எத்தனை ஆபத்தில் வனவிலங்குகள்?

    காற்று மாசு, பருவநிலை மாற்றம், காட்டுத் தீ உள்ளிட்டவைகளுக்கு சுற்றுச்சூழல் சீர்கேடு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக்கை அறவே ஒழிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

    மோடி பாதுகாப்பில் குளறுபடி: பிற விசாரணைகள் ரத்து! 4 பேர் விசாரணை குழு அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடிமோடி பாதுகாப்பில் குளறுபடி: பிற விசாரணைகள் ரத்து! 4 பேர் விசாரணை குழு அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடி

    பிளாஸ்டிக்கால் நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அது போல் இந்த பிளாஸ்டிக்குகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதுடன் வாயில்லா ஜீவன்களான விலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    பிளாஸ்டிக்குகள்

    பிளாஸ்டிக்குகள்

    உணவு பொருட்களில் இருக்கும் பிளாஸ்டிக்குகளை வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள், சாலைகளில் இருக்கும் நாய், பூனை, மாடு, கழுதை உள்ளிட்ட விலங்குகள் உண்டால் அதன் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதற்குத்தான் பிளாஸ்டிக் இல்லாத நாடாக மாற்ற அனைத்து மாநில அரசுகளும் தங்களால் இயன்ற முயற்சிகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.

    பாக்கு மரத்தட்டுகள்

    பாக்கு மரத்தட்டுகள்

    பிளாஸ்டிக் பிளேட்டுகளுக்கு மாற்றாக பாக்கு மர தட்டுகள், தையல் இலைகளால் ஆன தொண்ணைகள் உள்ளிட்டவை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கடைகளுக்கு செல்லும் போது துணி பைகளை பயன்படுத்தவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அது போல் குப்பைகளையும் கொட்டுவதற்கு முன்னர் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்குமாறு கூறப்படுகிறது.

    குப்பைகளோடு குப்பை

    குப்பைகளோடு குப்பை

    ஆனால் என்னதான் அரசு அறிவுரை வழங்கினாலும் சிலர் கேட்டபாடில்லை. பிளாஸ்டிக், கவர்கள், நாப்கின்களை குப்பைகளோடு குப்பையாக கொட்டி இந்த மண்ணுக்கு கேடு ஏற்படுத்துவதன் மூலம் ஒவ்வொருவர் சுவாசிக்கும் காற்றுக்கும் கேடை விளைவிக்கிறார்கள். இது விலங்குகளையும் கடுமையாக பாதிக்கிறது.

    மருதமலை அடிவாரம்

    மருதமலை அடிவாரம்

    அந்த வகையில் கோவை மருதமலை அடிவாரத்தில் யானை ஒன்று சாணம் போட்டுவிட்டு சென்றது. யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அங்கிருந்த சாணத்தை ஆய்வு செய்த போது அதில் பிளாஸ்டிக் கவர், முக்கவசம், நாப்கின்கள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் இருந்தன. வனப்பகுதியை ஒட்டிய குப்பைக் கிடங்குகளில் இருந்து ஏதேனும் தீனியை யானை உண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது போன்ற அபாயகரமான பொருட்கள் யானைகள் உள்ளிட்ட விலங்குகளின் உயிருக்கு உலை வைக்கும் என்பதை நம் மக்கள் எப்போதுதான் உணர போகிறார்களோ!

    English summary
    Plastic cover, Napkin, Mask are there in Elephant's dung in Coimbatore Maruthamalai camp.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X