PM Kisan: அக்கவுண்டுக்கு வந்த ரூ.2,000.. பிஎம் கிசான் உதவித் தொகை.. 9 கோடி விவசாயிகளுக்கு விடுவித்தார் மோடி
கோவை: கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடி பிஎம் கிஷான் திட்டத்தின் 21-வது தவணையை இன்று விடுவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 22 லட்சம் விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.2,000 ஏறுகிறது. இது தொடர்பாக நேற்று தகுதியான விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இன்று கோவை வந்த பிரதமர் மோடி இந்த உதவித்தொகையை விடுவித்தார்.
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று கோவை வந்துள்ளார். அப்போது பிரதமர் மோடி தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டினை தொடங்கி வைத்தார். இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த மாநாடானது நடக்கிறது. தொடர்ந்து பிரதமர் மோடி பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் 21வது தவணையை இன்று விடுவித்தார்.

பிஎம் கிஷான் திட்டம்
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை மூன்று தவணையாக வழங்கும் திட்டமே பிஎம் கிஷான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இந்த நிதி உதவியானது வழங்கப்படுகிறது. ஒரு தவணையில் ரூ.2,000 என மூன்று தவணையாக ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். தற்போது விவசாய நிலங்கள் தொடர்பாக கிராமப்புறங்களில் பயனாளிகளின் பட்டா எண் உள்ளிட்ட தகவல்கள் சேர்க்கப்பட்டது. இதன்படி தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு மட்டுமே இந்த உதவித் தொகையானது வழங்கப்படுகிறது. அதன்படி தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.2000 உதவித்தொகை விடுவிக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 22 லட்சம் விவசாயிகளுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கிறது.
செல்போனுக்கு வந்த மெசேஜ்
முன்னதாக நேற்று மாலை முதல் பயனாளிகள் செல்போன் எண்களுக்கு குறுந்தகவல் வந்திருக்கிறது. இதில், "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 21வது தவணை தொகையை 19.11.2025 அன்று மதியம் 1.00 மணிக்கு மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் விடுவிக்கிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் https://pmindiawebcast.nic.in/. உங்கள், சிவ்ராஜ் சிங் சௌஹான், மத்திய அமைச்சர் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம். என்று கூறப்பட்டு இருந்தது.
18 ஆயிரம் கோடி
இன்று பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுக்காக ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்துள்ளார். இதில் தமிழகத்தில் 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். தமிழகத்தில் மாவட்ட வாரியாக பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை வருமாறு:-
1. அரியலூர் - 67,845
2. செங்கல்பட்டு -26,431
3. சென்னை -38
4. கோவை -44,837
5. கடலூர் -75,924
6. தருமபுரி -1,00,192
7. திண்டுக்கல் -73,409
8. ஈரோடு -72,671
9. கள்ளக்குறிச்சி -74,425
10. காஞ்சிபுரம் -21,873
11. கன்னியாகுமரி -1,19,279
12. கரூர் -48,509
13. கிருஷ்ணகிரி -85,527
14. மதுரை -55,494
15. மயிலாடுதுறை -13,154
16. நாகப்பட்டினம் -22,537
17. நாமக்கல் -64,542
18. பெரம்பலூர் -51,570
19. புதுக்கோட்டை - 79,747
20. ராமநாதபுரம் -56,799
21. ராணிப்பேட்டை -40,270
22. சேலம் -1,15,753
23. சிவகங்கை -57,976
24. தென்காசி -38,148
25. தஞ்சாவூர் - 63,641
26. நீலகிரி - 20,460
27. தேனி - 26,501
28. திருவள்ளூர் -40,079
29. திருவாரூர் -38,891
30. தூத்துக்குடி -47,336
31. திருச்சி - 99,739
32. நெல்லை -29,344
33. திருப்பத்தூர் -39,134
34. திருப்பூர் - 61,356
35. திருவண்ணாமலை - 1,39,012
36. வேலூர் -34,993
37. விழுப்புரம் - 82,947
38. விருதுநகர் - 49,821
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications