5வது முறை.. கோவையில் நாளை பிரதமர் மோடி பிரச்சாரம்.. பரபரக்கும் என்டிஏ பொதுக்கூட்டம் ஏற்பாடுகள்!
கோவை: தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி நாளை மாலை கோவை வரவிருக்கிறார். கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நாளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் தமிழ்நாடு வரவுள்ள நிலையில், மோடியும் வருவது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கடைசி கட்ட பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தொகுதி வாரியாக தங்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தேசிய கட்சித் தலைவர்களின் பார்வையும் தமிழ்நாடு பக்கம் திரும்பி இருக்கிறது.

நாளை தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூடு ஆகிய தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதேபோல் ஏப்ரல் 20ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரும் ராகுல் காந்தி, நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழக சட்டசபைத் தேர்தல் அறிவிப்புக்கு பின் ராகுல் காந்தி முதல்முறையாக வருகிறார்.
இதனால் ராகுல் காந்தி பிரச்சாரம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மறுபக்கம் நாளை மாலை பிரதமர் மோடி கோவைக்கு பிரச்சாரத்திற்காக வருகிறார். நாளை மாலை 5 முதல் 6 மணி வரை கோவை கொடிசியா மைதானத்தில் என்டிஏ பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து ரோடு ஷோ நடத்தும் மோடி, பின்னர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய பொதுக்கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். இதையடுத்து நேற்று முன் தினம் நாகர்கோவிலில் ரோடு ஷோவில் ஈடுபட்டார். தற்போது மீண்டும் பிரதமர் மோடி கோவையில் பிரச்சாரம் மேற்கொள்வது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவையில் பாஜகவுக்கு அதிக ஆதரவு இருக்கும் சூழலில், பிரதமர் மோடியின் பிரச்சாரம் அதனை அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் வானதி ஸ்ரீனிவாசன் இன்றுதான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யவிருப்பது வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications