விஷ ஊசி போட்டு டாக்சி ஓட்டுனர் கொலை.. கணவருடன் வசமாய் சிக்கிய ஒத்த ரோசா.. பரபர பின்னணி
கோவை : கோவையில் கால் டாக்சி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக 6 ஆயிரம் ரூபாய்க்காக விஷ ஊசி செலுத்தி கொலை செய்த கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் வடவள்ளி அருகே ஓலப்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கால் டாக்ஸி ஓட்டுனர் ஆன சனு என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவரை யாராவது அடித்துக் கொலை செய்திருக்கலாம் என கூறி அவரது உறவினர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓட்டுனர் கொலை
சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறவினர்களிடம் தெரிவித்ததையடுத்து உடல் நேற்று பெற்றுக் கொள்ளப் பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் புகாரை பெற்று 4 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கணவன் மனைவி கைது
கடைசியாக அவர் பேசிய செல்போன் உரையாடல் மற்றும் தொலைபேசி எண்களை வைத்து டாக்ஸியில் பயணித்த ஸ்டீபன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஸ்டீபனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பணத்திற்காக அவரும் அவரது மனைவியான அமலொற்பவம் என்பவரும் சனுவை கட்டையால் அடித்து விஷ ஊசி செலுத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் வைத்திருந்த 6,100 ரூபாய் பணம் லேப்டாப் செல்போன்களை எடுத்து தப்பியது தெரியவந்தது.

2 கொலை வழக்குகள்
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய மரத்தடி, பணம் லேப்டாப் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் கணவன் மனைவி மீது ஏற்கனவே இது போன்ற விஷ ஊசி செலுத்தி கொலை செய்த 2 கொலை வழக்குகள் ஆயுத வழக்கு திருட்டு உள்ளிட்டவை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

பெரும் அதிர்ச்சி
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஸ்டீபன் வேறு ஏதேனும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார் எனவும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அதே நேரத்தில் வாடகைக்கு கார் ஓட்டி பிழைப்பு நடத்தும் கார் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்ஸி ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications